கவாசாகி 'இசட் 650 ஆர்.எஸ்.,' 'ஜென் ஸீ'க்கு பிடிக்கும் ரெட்ரோ ஸ்போர்ட் பைக்
கவாசாகி 'இசட் 650 ஆர்.எஸ்.,' 'ஜென் ஸீ'க்கு பிடிக்கும் ரெட்ரோ ஸ்போர்ட் பைக்
UPDATED : டிச 31, 2025 08:27 AM
ADDED : டிச 31, 2025 07:35 AM

'கவாசாகி' நிறுவனம், 'இசட் 650 ஆர்.எஸ்.,' என்ற ரெட்ரோ ஸ்போர்ட் பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை, 14,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, இறக்குமதி முறையில் இங்கு விற்பனையாகிறது.
இரு புதிய நிறங்களில் வரும் இந்த பைக், 20 சதவீதம் எத்தனால் கலப்பு எரிபொருளுக்கேற்ப இதன் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இதில் வரும் 649 சிசி இன்ஜினின் டார்க், 1.9 என்.எம்., குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த பைக்கின் இதர உபகரணங்கள், அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
![]() |
நகர்புற மற்றும் நீண்ட தூர பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், வட்ட வடிவ எல்.இ.டி., ஹெட்லைட், எல்.சி.டி., டிஸ்ப்ளே, 'ஸ்லிப் அண்ட் அசிஸ்ட்' கிளட்ச், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கன்ட்ரோல், 300 மற்றும் 220 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், 800 எம்.எம்., சீட் உயரம், 17 அங்குல காஸ்ட் அலாய் சக்கரங்கள் ஆகியவை வருகின்றன.
ராயல் என்பீல்டு 'இன்டர்செப்டார் 650', 'கான்ட்டினென்டல் ஜி.டி., 650', ட்ரையம்ப் 'ட்ரிடன்ட் 660', ஹோண்டா 'சி.பி., 650 ஆர்' ஆகிய பைக்குகள் இதற்கு போட்டியாக உள்ளன.


