sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

 திமிங்கிலங்கள் சிக்குமா ? செங்கோட்டையன் 'வலை'யில்

/

 திமிங்கிலங்கள் சிக்குமா ? செங்கோட்டையன் 'வலை'யில்

 திமிங்கிலங்கள் சிக்குமா ? செங்கோட்டையன் 'வலை'யில்

 திமிங்கிலங்கள் சிக்குமா ? செங்கோட்டையன் 'வலை'யில்


ADDED : டிச 30, 2025 07:12 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கோட்டையன் 'வலை'யில் திமிங்கிலங்கள் சிக்குமா?

''மி த்து... எல்லாமே அட்வான்ஸ் பேமென்ட்தான்''

கூறியவாறே வந்தாள் சித்ரா.

''ஆமாக்கா... தேர்தல் நெருங்குனாலே அப்படித்தான்''

''மித்து... பல்லடத்தில சி.எம். கலந்துக்கிட்ட தி.மு.க. மகளிரணி மாநாடு நடந்துச்சுல்ல...

''இதுல கலந்துக்கிறதுக்காக, திருப்பூர்ல 60 வார்டுல இருந்தும் லேடீைஸ அழைச்சிட்டுப் போயிருக்காங்க...

''வார்டுக்கு 40 லேடீஸ்... ஒவ்வொருத்தருக்கும் 300 ரூபாயும், கட்சிக்கொடி வண்ணத்துல சேலையும் அட்வான்ஸாவே, வழங்கிட்டாங்களாம்.

''இதேமாதிரிதான் ஒவ்வொரு பகுதிலயும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க''

''அக்கா... மாநாடு ஏற்பாடுகளை, வழக்கம்போல, செந்தில்பாலாஜி தான் தீவிரமா கவனிச்சாராம்.

''ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் என்னென்ன அசைன்மென்ட்ன்னு டெய்லி அவர்ட்ட கேட்டுக்குவாங்களாம்.

''மாநாடு நடக்குறது திருப்பூர் மாவட்டத்துல... இதனால, சொந்த மாவட்டத்தோட சீனியர் மினிஸ்டரோட பங்களிப்பும் வேணும்தானே!

''ஆனாலும் சீனியர்ங்கறதால சங்கோஜம் இருக்கும்ல... மொதல்ல மாநாடு ஏற்பாடுகள்ல கவனம் செலுத்தாமதான் சீனியர் இருந்தாராம்.

''அப்புறம் களத்துக்கு வர ஆரம்பிச்சுட்டாராம்''

''மித்து... மத்தவங்க மாதிரி 'பாலிடிக்ஸ்' பண்றவரில்ல நம்ம 'சாமி'...''

பூடகமாகச் சொன்னாள் சித்ரா.

இரை விழுமா? ''அக்கா... த.வெ.க.ல சேர்ந்த பிறகு செங்கோட்டையனோட திருப்பூர் மாவட்ட டூர் எப்படி இருந்துச்சாம்.

''மித்து... குறி வச்சா இரை விழும்ன்னு தான் செங்ஸ். நினைச்சாராம். ஆனா, எதிர்பார்த்த அளவுக்கு அ.தி.மு.க.ல சீனியர்ஸ் யாரும் த.வெ.க.ல சேரல...

''ஆனாலும், இணைப்பு விழாங்கற பேர்ல நிறைய பேர் கட்சில சேர்ந்ததா, செங்ஸ் 'கெத்து' காட்டீட்டாராம்.

''ஏற்கனவே அ.தி.மு.க. எம்.பி.யா இருந்த சத்தியபாமா த.வெ.க.ல செங்ஸ் சேர்ந்தபோதே சேர்ந்துட்டாங்க... சத்தியபாமா அப்ப இருந்தே செங்ஸ் ஆதரவாளர்தானே!

''தேர்தல் நெருங்கும்போதுதான், செங்ஸ் விரிச்ச வலைல திமிங்கிலங்கள் சிக்குமான்னு தெரியும். இதுவரைக்கும் சின்னச் சின்ன மீன்கள் தான் சிக்கியிருக்காம்.

''திருப்பூர்ல கூட்டம் நடந்தப்ப செங்ஸ் என்ன பேசுனார்னே யாரு காதுலயும் விழலயாம்.

''ஒரே ஆரவாரம்தானாம். செங்ஸ் அதை ரசிச்ச மாதிரிதான் தெரிஞ்சுது...

''ஒரு கட்டத்தில் முன்பகுதில இருந்த பத்திரிகையாளர்களை நெருக்கியடிச்சுதாம் கூட்டம். பத்திரிகையாளர்கள் திணறிட்டாங்களாம்.

''நம்ம கூட்டத்தை யாராலயும் கட்டுப்படுத்த முடியாதுன்னு செங்ஸ் பில்டப் பண்ண, இன்னும் ஆரவாரம் அதிகமாயிருச்சாம்.

''சத்தம் அடங்கவே இல்லையாம். அப்புறம்தான் பத்திரிகையாளர்களைப் பார்த்து 'மன்னிச்சுக்கோங்க'ன்னு கேட்டாராம்''

''அது எப்படிக்கா... கூட்டத்துல கலந்துக்கிட்ட மாதிரியே தெளிவாச் சொல்றீங்க''

மலைத்தாள் மித்ரா.

பல்லடத்தில் பா.ஜ.வா? ''அக்கா... திருப்பூர் மாநகர் மாவட்டத்துல, அ.தி.மு.க. செயலாளரா ஜெயராமன்தான் இருக்காரு.

''அவரு கோவை மாவட்டத்துக்காரரு. கடுமையா உழைக்கிறாரு...

''ஆனாலும் மா.செ. இல்லாதபோது, திருப்பூர்ல கூட்டம் சேர்க்கறதுன்னா சொதப்பிடறாங்களாம்.

''தேர்தல் வர்றதால, கட்சி நிகழ்ச்சிக்காக மா.செ. சென்னை போயிருந்தாராம்.

''ஜெ. மற்றும் எம்.ஜி.ஆர். நினைவு நாள்ல திருப்பூர்ல, ஒவ்வொரு கோஷ்டியா வந்துதான் மலரஞ்சலி செலுத்தியிருக்காங்க... மறக்காம 'குரூப் போட்டோ'வும் எடுத்துக்கிட்டாங்களாம்.

''எம்.ஜி.ஆர். நினைவு நாள் செலவுகளை, எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பழனிசாமிதான் செஞ்சிருந்தாராம்.

''அனைவரும் ஒருங்கிணைஞ்சு விழாவை சிறப்பா நடத்த யோசிக்க மாட்டீங்கறாங்கன்னு, தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறாங்களாம்''

''மித்து... நீ சொல்றது நிஜம்தான். ஆனா, என்னத்தச் சொல்ல!

''திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கயம் தொகுதில போட்டியிட, 'பசை'யான நபர்கள் தலா மூனு பேர் அடங்கிய லிஸ்ட்டை அ.தி.மு.க. தலைமை பரிசீலனை பண்றதா சொல்றாங்க...

''பல்லடத்துல லோக்சபா தொகுதில அ.தி.மு.க.வைக் காட்டிலும் பா.ஜ. அதிக ஓட்டு வாங்குனதால, பல்லடத்துல பா.ஜ.வோட வி.ஐ.பி. வேட்பாளர் போட்டியிடலாம்ங்கற கருத்தும் நிலவுது.

''இதனாலதான் பல்லடம் சிட்டிங் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு, தெற்குக்கும் சேர்த்து விருப்பமனு கொடுத்துருக்காராம்''

சித்ரா வெளிப்படையாகச் சொன்னாள்.

''அக்கா... ஊத்துக்குளில மத்திய அரசைக் கண்டிச்சு நடந்த ஆர்ப்பாட்டத்துல 'தோழர்' சரவணன் வரம்பு மீறிப் பேசினாருன்னு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தாமரைக்கட்சிக் காரங்க 'ஷாக்' கொடுத்தாங்கள்ல.

''மனு கொடுத்துட்டு போயிருவாங்கன்னுதான் போலீஸ்காரங்க நெனைச்சிருக்காங்க... ஆனா மிட்நைட் வரைக்கும் போராடுவாங்கன்னு நெனைச்சுக்கூட பாக்கலையாம்.

''ஒருவழியா சி.எஸ்.ஆர். போட்டாதான் விடுவாங்கன்னு தெரிஞ்சபிறகுதான், ஸ்டேஷன்ல சி.எஸ்.ஆர். போட்ருக்காங்க...''

மித்ரா மூச்சிரைக்கப் பேசினாள்.

அலறும் அதிகாரிகள் ''மித்து... கார்ப்பரேஷனுக்கு குப்பை பிரச்னை தலைவலியா இருக்குல்ல... பொதுமக்கள் தரம் பிரிச்சு குப்பையை கண்டிப்பா வழங்கணும்ன்னு கார்ப்பரேஷன் சொல்லுது...

''மக்கள் பிரிச்சுக் கொடுத்தாலும், வாகனத்தில கொட்டும்போது, எல்லாத்தையும் ஒன்னா கலந்துடறாங்களாம்.

''இதனால கொடுத்தும் பலனில்லாம போயிருதுன்னு மக்கள் வேதனைப்படறாங்க''

''அக்கா, நீங்க சொல்றது சில இடங்கள்ல மட்டுமா இருக்கலாம்.

''மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல மாநகராட்சி நகர் நல அலுவலர் தலைமைல கூட்டம் நடந்துருக்கு...

''அதுல தயவு செஞ்சு குப்பையைத் தரம் பிரிச்சுக் கொடுங்க... ஏன்னா, இப்ப எதுன்னாலும் வழக்குப் போட்டுடறாங்க...

''குப்பை கொட்டுற இடத்துல ட்ரோன் கேமரா வச்சு படம் எடுத்துடறாங்க...

''கோர்ட்ல என்னதான் முறையிட்டாலும், இதை ஆதாரமா காட்டீடுறாங்கன்னு கார்ப்பரேஷன் அதிகாரிங்க புலம்பியிருக்காங்க...''

''மித்து... இதெல்லாம் மொதல்லயே கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு தெரிஞ்சிருக்கணும்''

யதார்த்தத்தைச் சொன்னாள் சித்ரா.

''மித்து... போன வாரம் தாராபுரம் அரசுப்பள்ளில மருத்துவ முகாம் நடந்துச்சாம். மினிஸ்டர்ஸ் துவக்கிவச்சுட்டுப் போயிருக்காங்க...

''அதுக்குப்பிறகு அங்க போன மருத்துவத்துறை பெண் உயர் அதிகாரி முகாமை பார்வையிடாம, நேரா, ெஹச்.எம். ரூமுக்குப் போய் உக்காந்துட்டாங்களாம்.

''லோக்கல் டாக்டர்ஸ் ஸ்வீட், மிக்சர், காபின்னு கொடுத்து உபசரிச்சாங்களாம். ஆனா, முகாமைக் கண்டுக்காம போயிட்டாராம்''

''அக்கா... நல்ல வேளை... முகாம் நடந்த இடத்துக்காவது வந்தாங்களே''

கிண்டலடித்தாள் மித்ரா.

கலெக்டர் டென்ஷன் ''அக்கா... பொதுத்தேர்வு நெருங்குறதால, கார்ப்பரேஷன் ஸ்கூல்ஸ்ல, ஸ்பெஷல் கிளாஸ் நடத்துறாங்க...

''மொதல்ல இருந்தே ஒரு கார்ப்பரேஷன் ஸ்கூல்ல இதுல பிரச்னைதானாம்.

''ஒருதரப்பு ஆசிரியர்கள், சண்டேல்லாம் வரச்சொல்லி டார்ச்சர் பண்றதால, ஸ்பெஷல் கிளாஸ் வேணாம்ன்னு சொல்றாங்களாம்.

''ஆனா, ெஹச்.எம். தரப்போ, ஸ்பெஷல் கிளாஸ் முக்கியம்ன்னு சொல்லுது.

''கலெக்டர்ட்ட வாய்மொழியா ரெண்டுதரப்புல இருந்தும் புகார் சொன்னாங்களாம்.

''டென்ஷனான கலெக்டர், சி.இ.ஓ.ட்ட சங்கடப்பட்டார் போல...

''இதனால சி.இ.ஓ. 'இன்னும் ரெண்டு மாசம்தான்... ஸ்பெஷல் கிளாஸ் நடக்கணும். இனி கம்ப்ளெய்ன்ட் வந்தா, கம்ப்ளெய்ன்ட் கொடுத்தவுங்க மேல தான் மொதல்ல நடவடிக்கை பாயும்'ன்னு சொன்ன பிறகுதான் இந்த 'நஞ்சப்பர்'கள் அடங்கியிருக்காங்களாம்''

''மித்து... அரசு டிப்போல திடீர்ன்னு மொபைல்போன் பயன்பாட்டை எச்சரிக்கும் விதமா, டிரைவர்களை திடீர்ன்னு உறுதிமொழி எடுக்க வச்சிருக்காங்க...

''காரணம் என்னன்னு விசாரிச்சா, சமீபத்துல கடலுார்ல டயர் வெடிச்சு அரசு பஸ் விபத்துக்குள்ளாச்சுல்ல... அந்த பஸ் டிரைவர், மொபைல்போன்ல பேசிட்டிருந்தப்பதான் விபத்து நடந்ததா சொல்றாங்க...

''இதனாலதான் அவசரமா இப்படி ஒரு உறுதிமொழி எடுக்க வச்சாங்களாம். ஆனா, இதை அதிகாரிகள் வெளிப்படையா சொல்லலையாம்''

மித்ரா கவனத்துடன் கேட்டாள்.

சிம்ம சொப்பனம் ''அக்கா... சிட்டி கமிஷனர் பொறுப்பேத்து ஒரு வருஷமாச்சு... கறைபடிஞ்ச கரங்களுக்கு இவர் சிம்ம சொப்பனமா இருக்கிறதால, தேர்தலையொட்டி இவர் 'டிரான்ஸ்பர்' ஆக மாட்டாரான்னு எதிர்பார்த்து காத்திருக்காங்களாம்.

''தேர்தலுக்கு முன்னாடி, சிட்டியை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் கோவை, சேலத்துக்கு டிரான்ஸ்பர் ஆகப் போறாங்க...

''சிட்டில இருக்கற இன்ஸ்பெக்டர்ங்க சிலர், சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு குறி வச்சிருக்காங்க... பணம், அதிகாரம், அரசியல் பலத்தையெல்லாம் பயன்படுத்துறாங்களாம்.

''இதுல 'ரஞ்சித'மானவர்தான் முன்னணில இருக்காராம்''

''ஆனா மித்து... அவருக்குக் கிடைக்கறது சந்தேகம்தானாம். ஏன்னா, அவரோட நடத்தை அப்படி''

சித்ரா 'பொடி வைத்து' பேசினாள்.

''மித்து... ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசியையொட்டி விஸ்வேஸ்வரர், வீரராகவப்பெருமாள் கோவில்கள்ல, பெயின்டிங் கோலம் வரைய அழைப்பு விடுத்திருக்காங்க...

''இது நல்ல விஷயம்தான். ஆனா, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் அனுப்புன வாட்ஸாப் மெசேஜ்ல, சிறப்பான கோலங்களை தேர்வு செஞ்சு, தமிழர் திருநாளில் - தமிழ்ப்புத்தாண்டில் பரிசு வழங்கப் படும்ன்னு சொல்லியிருக்காரு.

''தமிழக அரசே, சித்திரை 1 தான் தமிழ்ப் புத்தாண்டுன்னு அறிவிச்சாச்சு. அதுக்கப்புறமும், அறங்காவலர் குழு தலைவருக்கு மட்டும், தை 1 தான் தமிழ்ப்புத்தாண்டா? அதுவும் தமிழக அரசு இலச்சினையோட, அதிகாரப்பூர்வமாக சொல்றது தமிழக அரசை எதிர்ப்பது போல் ஆகாதான்னு, அரசாணை நகலை பதிவிட்டு, ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவிச்சிருக்காங்களாம்''

''அக்கா... பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எப்படிக்கா போகுது?''

''மித்து... உற்பத்தியாளர் சங்கங்கள், 20 சதவீத சம்பள உயர்வை வழங்க முன்வந்ததே வெற்றின்னு தொழிற்சங்கங்கள் சந்தோஷப்படறாங்க... ஆனா, கோரிக்கையான 120 சதவீத சம்பள உயர்வைத்தான் வலியுறுத்துவோம்ன்னு சொல்றாங்க...''

''அக்கா... எப்படியோ... சீக்கிரம் பேச்சுவார்த்தை முடிஞ்சாதான் நல்லது''

''மித்து... இன்னும் நாம பேசிக்கிட்டிருந்தா, வீட்டுல பேச்சுவார்த்தை நின்னுடும்''

கலகலவென சிரித்தபடியே சித்ரா வீட்டுக்கு ஸ்கூட்டியில் புறப்பட்டாள்.

''மனு கொடுத்து போயிருவாங்கன்னுதான் போலீஸ்காரங்க நெனைச்சிருக்காங்க... ஆனா மிட்நைட் வரைக்கும் பா.ஜ. காரங்க போராடுவாங்கன்னு நெனைச்சுக்கூட பாக்கலையாம்''







      Dinamalar
      Follow us