sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

 அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை

/

 அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை

 அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை

 அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை


ADDED : டிச 23, 2025 07:34 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி குளிர் வெடவெடத்தது; ஏலக்காய் மணக்க, சித்ரா சுடச்சுட போட்டுக்கொடுத்த டீயை ருசித்தவாறே அரட்டை கச்சேரியைத் துவங்கினாள் மித்ரா.

''எஸ்.ஐ.ஆர். பணில தீவிரமா ஈடுபட்ட தி.மு.க. - அ.தி.மு.க. காரங்க, விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்கற பணிலயும் தீவிரம் காட்டுறாங்களாம்க்கா''

''மித்து... அ.தி.மு.க.ல பொதுச்செயலாளர் பிரசாரப் பயண ஏற்பாடுல துவங்கி, எஸ்.ஐ.ஆர். பணில ஈடுபட்ட பூத் ஏஜென்ட்களுக்கு பணம் கொடுக்குறது வரை எல்லாமே ரெண்டு பேர் தலைலதான் கட்றாங்களாம்.

''வடக்கு தொகுதில சிட்டிங் எம்.எல்.ஏ. இருந்தாலும் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகி 'குமார்வேல் நாதன்சாமி' தலையிலதான் கட்டறாங்களாம்.

''அடுத்தது நீங்கதான்னு உசுப்பேத்தியே செலவு பண்ண வச்சர்றாங்களாம்.

''தெற்கு தொகுதில வி.ஐ.பி.க்கள் இல்லாததால ஜெ. பேரவை 'லோகு' தான் எல்லா செலவும் பண்றாராம்''

''அப்படீன்னா, ரெண்டு பேருக்கும் சீட் 'கன்பர்ம்'ன்னு சொல்லுங்கக்கா''

''அப்படியெல்லாம் சொல்ல முடியாது... தெற்குல பல்லடம் எம்.எல்.ஏ. ஆனந்தனும், மாஜி எம்.எல்.ஏ. குணசேகரனோட மனைவியும் விருப்ப மனு வழங்கியிருக்காங்க...

''அதேபோல, வடக்குல 'மாஜி' சிவா தான் பம்பரமா சுழலறாராம். பூத் வாரியா வேலை பார்க்கத் துவங்கீட்டார்ன்னு சொல்றாங்க''

''சித்ராக்கா... விருப்ப மனுக்கு அஞ்சு பைசா செலவில்ல... அதனால காங்கிரசுல மாவட்டத்துல 20க்கும் மேற்பட்டவங்க விருப்ப மனு கொடுத்திருக்காங்களாம்.

''மித்து... போட்டா போட்டியா இருக்கும் போலவே...''

''சத்தியமூர்த்தி பவனுக்கே போகாம, இங்கயே கொடுக்கறதுன்னா வலிக்கவா போகுதுக்கா... மாவட்டத்துல ஒரு தொகுதிலயாவது போட்டி போடுறாங்களான்னு பார்ப்போம்க்கா''

''மித்து... தேசிய வேலை உறுதித்திட்ட பேரு மாத்துனத கண்டிச்சு, மத்திய அரசுக்கு எதிரா, மாவட்ட தலைநகரங்கள்ல காங். ஆர்ப்பாட்டம் நடத்தணும்ன்னு மாநிலத் தலைமை அறிவுறுத்துச்சு...

''ஆனா, திருப்பூர் மாநகர மாவட்ட காங். சார்பில ஆர்ப்பாட்டம் இன்னும் நடக்கலே...

''விசாரிச்சா, இன்னும் தேதி முடிவு பண்ணலைங்கறாங்க''

''நல்ல நாளு பார்த்துச் சொல்வாங்க்கா''

நக்கலடித்தாள் மித்ரா.

ஆங்கிலத்தில் பேசிய விவசாயி ''அக்கா... கலெக்டர் ஆபீஸ்ல நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல மாநகராட்சி குப்பை பிரச்னைக்கு எதிரா கருப்புச்சட்டை அணிஞ்சு விவசாயிகள் பங்கேற்றாங்க...

''பி.ஏ.பி. - காட்டுப்பன்றி - பாறைக்குழி ஊழல்ன்னு ஏகப்பட்ட பிரச்னைகளை விவசாயிகள் முன்வச்சாங்க...

''இதனால கூட்டத்தில ஒரே இறுக்கம்.

''சிக்கனுாத்தை சேர்ந்த மனோகரன்ங்கற விவசாயி பேச ஆரம்பிச்சதும் கூட்டம் கலகலப்பாயிடுச்சு.

''இங்கிலீஷ்ல எழுதிட்டு வந்திருந்ததைப் பார்த்து தட்டுத்தடுமாறிப் பேச ஆரம்பிச்சாரு...

''கலெக்டருக்கு இங்கிலீஷ்ல சொன்னா புரியும்ங்கறதால, இப்படிப் பேசுறதா சொன்னாரு...

''பதில் கூறுன அதிகாரிகளிடம், 'நெக்ஸ்ட், தென், வாட் ஈஸ் த ஆக்ஷன்'னு கேள்வி கேட்டாரு... விவசாயிகள், அதிகாரிகள் எல்லாருமே இதை ரசிச்சிருக்காங்க...

''அந்த பேப்பரைக் கொடுங்க, நாங்களே கலெக்டர்ட்ட தெளிவா சொல்லிடறோம்ன்னு ஆபீசர் ஒருத்தர் கேட்ருக்காரு...

''நோ... நோ ஐ ரீடுன்னு சொல்லி பேப்பரைப் பார்த்து மனோகரன் படிச்சாரு...

''கலெக்டரும் மனசு விட்டு சிரிச்சாராம்...''

''ஆமா மித்து... எந்நேரமும் சண்டக்கோழியாவே இருக்கக்கூடாதுதான். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல உயர் பொறுப்புல இருக்குற அலுவலரை கோவைக்கு டிரான்ஸ்பர் பண்ணீட்டாங்க.

''ஆனா, அவரு இங்க இருந்து இன்னும் நகரலையாம். ஆண்டுக்கணக்குல 'ஸ்கரப்'கள(கழிவுப்பொருட்கள்) டெண்டர் விடாம இருந்தாங்களாம்.

''இப்ப இதுல ஒன்னரை 'லகரம்' வரைக்கும் அமுக் கிட்டாராம்.

''அதிகாரிகள் விசாரிச்சப்ப எல்லாமே முறைப்படிதான் நடந்திருக்குன்னு சொல்றாராம்''

''எல்லாத்தையும் அந்த 'வேல்முருகன்' பார்த்துக்குவார்ன்னு சொல்லுங்க்கா''

சித்ரா ஆமோதித்தாள்.

'ஸ்கோர்' செய்த அண்ணாமலை ''மித்து... மாநகராட்சி குப்பை விவகாரத்துல, சின்னக்காளிபாளையத்தைச் சேர்ந்த பத்து பேரை அரெஸ்ட் பண்ணுனது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்தியிருக்கு...''

''ஆமாக்கா... பா.ஜ. அண்ணாமலையோட தலைமையில ஆர்ப்பாட்டத்தை மேலிடத்து உத்தரவுப்படி ஒடுக்கலாம்ன்னு போலீஸ் நெனச்சாங்க.

''ஆனா... அரெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி உணர்ச்சிகரமா பேசி அண்ணாமலை 'ஸ்கோர்' வாங்கீட்டுப் போயிட்டாரு. அடக்க நினைச்ச போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலைன்னு பா.ஜ. காரங்க புகழ்ந்து தள்றாங்க.

''அண்ணாமலை வரும்போது குமரன் சிலை முன்னாடி பா.ஜ. காரங்க திரண்டுட்டாங்க.

''அவங்கள ஒரு வழியா பேசி, வேனில் ஏத்தறதுக்குள்ள போலீஸ் திக்குமுக்காடிட்டாங்க.

''பா.ஜ.வை சேர்ந்த வக்கீல் ஒருத்தரு கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, கொங்கு நகர் உதவி கமிஷனர் தடுமாறிட்டாராம்.

''பா.ஜ. காரங்க, கடை உள்ளிட்ட பகுதிகள்ல, கூட்டம், கூட்டமா நின்னுட்டிருந்தாங்களாம்.

''போலீசார் கைது செய்றதா, வேணாமாங்கற மன நிலையில இருந்தாங்க...

''அங்கு வந்த வடக்கு துணை கமிஷனர், 'இத்தனை பேரு நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா... பத்து பேரை அரெஸ்ட் பண்ணக்கூட உங்களுக்கு முடியலையா? மேல இருந்து எனக்கு போன் மேல போன் வருது'ன்னு போலீஸ்காரங்க மேல கோபத்தைக் கொட்டித்தீர்த்தாராம்''

''ஆமா மித்து... ஆபீசருங்களுக்கும் பிரஷர்தானே... இதெல்லாம் சரி... ஒரு வழியா தோழர்களும் போராடக் கெளம்பீட்டாங்க பார்த்தியா...

''அரெஸ்ட் பண்ணுனவங்கள விடுவிக்கணும். மேல் நடவடிக்கை கூடாதுன்னு எம்.பி. சுப்பராயனும் சொல்லியிருக்காரே.

''வர்ற 29ம் தேதினு சொன்ன ஆர்ப்பாட்டத்தை 31ம் தேதிக்கு 'தோழர்கள்' மாத்தீட்டாங்க... பல்லடத்துல 29ல் நடக்கிற தி.மு.க. மகளிரணி மாநாட்டுல சி.எம். கலந்துக்கிறாரு.

''இது தெரியாம, தேதியைக் குறிச்சதால, இப்பத் தேதியை மாத்தியிருக்காங்க...

''கூட்டணிக்குப் பங்கம் வரக்கூடாதுங்கறதுல தோழர்கள் கவனமா இருக்காங்க...

''இதுக்கான ஆலோசனைக்கூட்டத்தில, இரு கட்சிகளைச் சேர்ந்த எட்டு கவுன்சிலர்கள்ல ஒருத்தர் மட்டும்தான் கலந்துட்டாராம்''

''சரிக்கா... ஆர்ப்பாட்டத்துலயாவது எட்டு பேரும் கலந்துக்குவாங்கள்ல''

''மித்து... பார்ப்போம்... பார்ப்போம்''

புன்னகைத்தாள் சித்ரா.

சிக்குகிறார் தீயணைப்பு அதிகாரி ''மித்து... குப்பை விவகார போராட்டத்துல அரெஸ்ட் ஆன ஒருத்தரு த.வெ.க. நிர்வாகி... அவரோடு குடும்பத்தினரை சர்ப்ரைஸ்ஸா, கொள்கைப்பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வந்து சந்திச்சாரு...

''நிர்வாகியோட அம்மா, 'எம் பையன் எந்தக் கட்சிலயும் இருந்ததில்ல... மொதல் தடவையா விஜய் கட்சில சேர்ந்தான். இப்ப அரெஸ்ட்ல வந்து நிக்குதுன்னு வேதனையோட சொன்னாராம்.

''இதைக்கேட்ட அருண்ராஜ், பையனை மீட்டுக் கொண்டு வருவோம். உறுதுணையா கட்சி எப்பவுமே இருக்கும் அப்படீன்னு உறுதி கொடுத்தாராம்''

''அக்கா... கிராமங்கள்ல, அதிகாரிகளோட ஜீப் வந்தாலே, மாநகராட்சி குப்பை கொட்றதுக்கு இடம் தேட வர்றாங்கங்கற மாதிரி மக்கள் பீதில அலர்றாங்க...

''பல்லடம் பக்கத்துல வாவிபாளையத்துக்கு டி.ஆர்.ஓ. தலைமையில ஆபீசர்ஸ் வந்தாங்களாம். குப்பை கொட்ட இடம் தேடி வந்ததா பொதுமக்கள் அலர்ட் ஆயிட்டாங்களாம். விசாரிச்சப்ப, இலவசப் பட்டா வழங்குறதுக்கு இடம் தேடுனதா, ஆபீசர்ஸ் சொன்னாங்களாம்.

''இதேமாதிரி பொல்லிக்காளிபாளையம் பகுதிக்கு ஆய்வுக்குப் போன கார்ப்பரேஷன் ஆபீசரையும் பொதுமக்கள் சிறைவச்சுட்டாங்க... போலீஸ் வந்துதான் அவரை மீட்டாங்க''

''மித்து... திருநெல்வேலி தீயணைப்புத்துறை துணை இயக்குனரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வச்ச சம்பவத்துல, அஞ்சு பேரை அரெஸ்ட் பண்ணுனாங்கள்ல...

''இந்தப் பின்னணில, திருப்பூரைச் சேர்ந்த ஒரு அலுவலரும் சிக்குறாராம். அடிக்கடி மொபைல் போன்ல, கைது செஞ்ச நபர்களோட இவரு பேசியிருக் காராம்.

''விசாரணைக்கு வர அவருக்கு சம்மன் அனுப்பியும் வரலையாம். ஐகோர்ட் மதுரை கிளைல முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செஞ்சிருந்தாராம்.

''அதுவும் தள்ளுபடி ஆயிருச்சு... எப்படியும் விசாரணைக்குப் போய்த்தானே ஆகணும்.

''உளவுப்பிரிவு போலீஸ் அவரை உன்னிப்பா கண்காணிக்கிறாங்களாம்''

''அக்கா... நம்ம பக்கத்துத் தெரு 'வீரராஜ்' அண்ணனைக் கேட்டா, இதப்பத்தி இன்னும் கூடுதலா விவரம் கிடைக்கும்''

மித்ரா நம்பிக்கையுடன் சொன்னாள்.

இரவில் மதுக்கூடமாகும் பள்ளி ''சிட்டி வி.ஐ.பி. வீட்டுல மின் முறைகேடு கண்டுபிடிச்சாங்கள்ல... இதுதொடர்பா உதவி செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளரையும் மாத்தினது சத்தமே இல்லாம நடந்துருச்சாம்.

''ஆனா, முறைகேடுக்காக இவங்கள மாத்துனாங்களா; பெரிய இடத்துல மோதினதுக்காகவான்னு தெரியலன்னு இ.பி. ஊழியர்களே சொல்றாங்களாம்''

''மித்து... போயம்பாளையத்துல கல்லாங்குத்து அரசு நிலம் ஒரு ஏக்கரை தனியார் ஆக்கிரமிச்சுருக்காங்களாம்.

''அங்கு மின் இணைப்பும் வழங்கியிருக்காங்களாம். அங்க மின் இணைப்பைத் துண்டிக்கணும்னு மின்வாரியத்துக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் லெட்டர் எழுதி யிருக்காராம்.

''ஆனா மின் இணைப்பைத் துண்டிக்காம, மின் வாரிய அதிகாரிகள் காலம் கடத்தறாங்களாம். கலெக்டர் வரைக்கும் புகார் போயிருக்கு''

''சித்ராக்கா... நுாறு நாள் வேலை திட்ட பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தப்போறாங்களாமே...

''ஆமாமா... வழக்கமா கூட்டத்துக்கு ஆள் சேர்க்கறதுக்கு, தி.மு.க.காரங்க நுாறு நாள் திட்ட ஊழியர்களைப் பயன்படுத்துறது வழக்கம். இதனால, இப்ப நடத்தப்போற போராட்டத்துக்கு பெரும் கூட்டத்தையே திரட்டிருவாங்கன்னு சொல்றாங்க...''

''பல்லடம் வடுகபாளையத்துல ஒரு பிரைவேட் ஸ்கூல் கேம்பஸ் நைட்ல ஒயின்ஷாப்பா மாறிடுதாம். இதனோட ஓனர் மேல ஏற்கனவே ஒரு எப்.ஐ.ஆர். இருக்கு... சரக்கு பாட்டில்கள கிணத்துக்குள்ள மறச்சு வெச்சு சேல்ஸ் பண்ணீட்டு இருக்குறாராம்''

''பாலு அண்ணன் கிட்ட கேட்டுப்பார்த்தா இன்னும் விவரமா சொல்வாராம்''

எப்.எம்.ரேடியோவில் 'தேவதையைக் கண்டேன்...' பாடல் வரிகள் ஒலிக்க ஆரம்பித்தது. மித்ரா, வீட்டுக்கு நடையைக் கட்டினாள்.






      Dinamalar
      Follow us