sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

வித்தியாசமான செல்லப்பிராணிகள்

/

வித்தியாசமான செல்லப்பிராணிகள்

வித்தியாசமான செல்லப்பிராணிகள்

வித்தியாசமான செல்லப்பிராணிகள்


UPDATED : நவ 15, 2025 08:45 AM

ADDED : நவ 15, 2025 08:43 AM

Google News

UPDATED : நவ 15, 2025 08:45 AM ADDED : நவ 15, 2025 08:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மடகாஸ்கரில், முள்ளெலி போன்ற 'டென்ரெக்'குகளை வளர்க்கின்றனர்.

* காண்டாமிருக வண்டுகள், கடிக்காது, குத்தாது என்பதால், ஜப்பானியர்கள் அதிகம் வளர்க்கின்றனர்.

* கென்யாவில் 'டிக்-டிக்ஸ்' என்ற சிறிய வகை மான்களை, பலரும் வளர்க்கின்றனர்.

* ஐக்கிய அரபு எமிரேட்ஸில், பருந்துகளை வளர்க்கலாம். இவற்றுடன் பயணிக்க, பிரத்யேக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

* இந்தோனேஷியா தீவுகளில், 80 உடும்பு இனங்கள் உள்ளன.

* சிலி நாட்டில் வாழும் கொறித்துண்ணியான 'டெகு', குழுவாக வாழும்; வித்தியாசமாக ஒலி எழுப்பும்.

விலங்குகளின் வினோதம்


* பண்டைய எகிப்தியர்கள், இறந்த பூனை உடலை பதப்படுத்தி, சவப்பெட்டியில் பாதுகாத்தனர்.

* மெக்சிகோவை சேர்ந்த ஆக்சோலோட்ல், உறுப்புகளை இழந்தால் மீள் உருவாக்கம் செய்து கொள்ளும்.

* அரிய பறவை இனமான நிக்கோபர் புறாவை, வீட்டில் வளர்க்க, இந்தியஅரசு தடை விதித்துள்ளது.

* செல்லப்பிராணிகளை குளோனிங் தொழில்நுட்பத்தால் உருவாக்குவதில், தென்கொரியா முன்னோடி.

* 2024ல், அமெரிக்காவில், செல்லப்பிராணிகளுக்கான காப்பீடு சந்தையின் மதிப்பு ரூ.500 கோடி.

* செல்லப்பிராணிகள் இறந்தால், இரண்டு நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க, கொலம்பியாவில் சட்டமே உள்ளது.Image 1495226

திரைப்படங்கள்


தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்:

ரகு என்ற அனாதை குட்டியானை அதை வளர்க்கும் பழங்குடியின தம்பதி பற்றிய ஆவண குறும்படம்; 2023ல் ஆஸ்கார் விருது வென்றது.

ஹாச்சி: ஒரு நாயின் கதை

ஜப்பானில் எஜமான் இறந்தது தெரியாமல், 10 ஆண்டுகளாக ரயில் நிலையத்தில் காத்திருந்த அகிதா இன நாய் பற்றிய படம்.

தி சீக்ரெட் லைப் ஆப் பெட்ஸ்:

உரிமையாளர் வீட்டில் இல்லாத போது, செல்லப்பிராணிகள், சந்திக்கும் பிரச்னைகள் பற்றி பேசும் கற்பனைக்கதை.

கேடி:

தெருக்களில் சுற்றித்திரியும் பூனை, அங்கு வசிக்கும் மனிதர்களுடன் எப்படி உறவாடுகிறது என்பதை விவரிக்கும் ஆவணப்படம்.

மார்ச் ஆப் தி பென்குயின்:

பென்குயின்கள் கடலில் இருந்து நிலப்பகுதிக்கு வந்து, இனப்பெருக்கம் செய்து, தன் வாரிசுகளை வளர்க்கும் பயணத்தை கூறும், ஆவணப்படம்.

இது குரைக்காது


* மனித கை ரேகை போல ஒவ்வொரு நாய்க்கும், மூக்கின் முகடு, மடிப்புகளில் சிக்கலான தனித்துவ வடிவங்கள் இருக்கும். கனடியன் கென்னல் கிளப், 1938ல் இருந்து அடையாள சான்றாக இதை ஏற்கிறது.

* டால்மேஷன் இன பப்பிகள் பிறந்து இரு வாரங்களுக்கு பிறகே உடலில் கறுப்பு, பழுப்பு நிற புள்ளிகள் தோன்றஆரம்பிக்கின்றன.

* உலகிலேயே குரைக்காத நாய் இனம் பாசென்ஜி. ஒருவித ஒலி எழுப்புதல், உறுமுதல், உடல் மொழி மூலம், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்.

* 'செள-செள' மற்றும் 'ஷார் பே' நாய் இனங்களுக்கு மட்டுமே, நாக்கு கறுப்பு- நீல நிறத்தில் இருக்கும்.






      Dinamalar
      Follow us