sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 ஊட்டச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய் ரோல் கேக்

/

 ஊட்டச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய் ரோல் கேக்

 ஊட்டச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய் ரோல் கேக்

 ஊட்டச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய் ரோல் கேக்


ADDED : நவ 29, 2025 05:52 AM

Google News

ADDED : நவ 29, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காயில், இந்த வாரம் பூசணிக்காய் ரோல் கேக் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

l பூசணிக்காய் - கால் கப்

l சமையல் சோடா - 1 டீஸ்பூன்

l இலவங்கப்பட்டை துாள் -- அரை டீஸ்பூன்

l மைதா அல்லது கோதுமை மாவு -- அரை கப்

l முட்டை -- 3

l நாட்டு சர்க்கரை -- ஒரு கப்

l சீஸ் கிரீம் -- 200 கிராம்

l வெண்ணெய் -- 2 டீஸ்பூன்

l ஐசிங் சர்க்கரை -- ஒரு கப்

l வெண்ணிலா எசென்ஸ் -- சிறிதளவு

l வால்நட், பாதாம், பிஸ்தா -- சிறிதளவு

செய்முறை

l பூசணிக்காயை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். மிக்சி அல்லது ப்ளெண்டரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

l ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு, சமையல் சோடா, இலவங்கப்பட்டை துாள் போன்றவற்றை சலித்து கலந்து கொள்ளவும்.

l ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நுரை வரும் அளவிற்கு ப்ளெண்டர் செய்துக் கொள்ள வேண்டும்.

l இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பூசணிக்காய் கலவை, மாவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் க்ரீமியாக வரும் வரை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

l இவை அனைத்தையும் பட்டர் சீட்டில் வைத்து பேக் செய்துக் கொள்ளவும். மைக்ரோ ஓவன் இல்லையென்றால் குக்கரில் பேக் செய்து எடுக்கலாம்.

l கேக் பேக் செய்யக்கூடிய நேரத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் சீஸ் கிரீம், வெண்ணெய், ஐசிங் சர்க்கரை போன்றவற்றை நன்கு கலந்துக் கொள்ளவும். இதனுடன் கொஞ்சமாக வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

l இறுதியாக பேக் செய்து வைத்துள்ள கேக் மீது வெண்ணிலா எசென்ஸ் கலந்த கலவைத் தடவிக் கொள்ளவும். பின்னர் பேக்கில் சுற்றி ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால், பூசணிக்காய் ரோல் கேக் தயார்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us