sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 நொறுக்குகள்

/

 நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : நவ 29, 2025 05:49 AM

Google News

ADDED : நவ 29, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l தேங்காய் சட்னியில் கொத்தமல்லி அரைத்து ஊற்றினால் சுவை அதிகமாகும்.

l குருமா செய்யும்போது தேங்காய் இல்லையெனில் பொட்டுக்கடலை அரைத்து ஊற்றலாம். குருமாவின் சுவை நன்றாகவே இருக்கும்.

l பொன்னாங்கண்ணி கீரையை நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் தயார்.

l பாதாம் பால் வீட்டில் செய்யும்போது, அதிக பாலாடையுடன் சேர்த்து குடித்தால் பால் சுவையாக இருக்கும்.

l மீன் குழம்பு வைத்த பின், உடனே குழம்பை சாப்பாட்டில் ஊற்றி சாப்பிடாமல் நான்கு மணி நேரம் கழித்து சாப்பிட்டால் குழம்பின் சுவை அருமையாக இருக்கும்.

l கல் உப்பை மிக்சியில் போட்டு அரைத்தால் வீட்டிலேயே துாள் உப்பு செய்ய முடியும்.

l வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன்னதாக சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

l அவித்த முட்டையை சிறிய துண்டுகளாக வெட்டி அதில் மிளகு தூள் போட்டு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

l துவரம் பருப்பை ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

l தோசை, இட்லி தொட்டு சாப்பிட செய்யும் சாம்பாரில் மஞ்சள் பூசணிக்காய் சேர்த்தால் சாம்பார் சுவையாகவும், கெட்டியாகவும் வரும்.

l உளுந்த வடைக்கு மாவு அரைக்கும்போது, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்தால் வடையை எண்ணெயில் பொரிக்கும்போது அதிகம் எண்ணெய் தேவைப்படாது.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us