தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ யோகாவில் ஜொலிக்கும் பிரவீணா

 யோகாவில் ஜொலிக்கும் பிரவீணா

 யோகாவில் ஜொலிக்கும் பிரவீணா


ADDED : ஜூன் 21, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

பெங்களூரு பசவேஸ்வரநகரை சேர்ந்தவர் பிரவீணா, 54. மருத்துவர் மற்றும் யோகா பயிற்சியாளர். இவருக்கு தனது சிறுவயதிலிருந்தே யோகா மீது ஆர்வம் அதிகம். இதனால், யோகாவில் உள்ள அனைத்து வித்தைகளையும் சிறுவயதிலேயே கற்றுக்கொண்டார். கல்லுாரியில் நன்றாக படித்து மருத்துவர் பட்டம் பெற்றார். மேலும், யோகாவில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து வயதினருக்கும் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் இதுவரை ௧,௦௦௦த்துக்கும் மேற்பட்டோர் யோகா கற்றுக்கொண்டு உள்ளனர். ஆன்லைன் வழியிலும் யோகா வகுப்புகள் எடுக்கிறார்.

இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் மாநில, தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பல பதக்கங்களை வாங்கி உள்ளனர். இவர் சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இவர் அறக்கட்டளை ஒன்றையும் நடத்துகிறார். இந்த அறக்கட்டளையில் பதிவு செய்வோருக்கு இலவசமாக யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் மூலம், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று உள்ளனர்.

ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இலவச யோகா வகுப்பு எடுக்கிறார். இவரது சேவையை பாராட்டி கடந்த ஆண்டு பெங்ளூரில் நடந்த தென்னிந்திய சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் 'மாற்றத்தை உருவாக்குபவர்' எனும் விருது வழங்கப்பட்டது.

இது, அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியது. இவர் யோகா மட்டுமின்றி மனோதத்துவ நிபுணராகவும் செயல்படுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us