sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

/

மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

3


UPDATED : ஆக 24, 2025 11:26 AM

ADDED : ஆக 24, 2025 05:49 AM

Google News

3

UPDATED : ஆக 24, 2025 11:26 AM ADDED : ஆக 24, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்:ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், 'ட்ரோன்' உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பலவும் ஆயுதத் தயாரிப்புக்கு மாறியுள்ளன.

ரஷ்யாவின் 2022 படையெடுப்புக்குப் பின், உக்ரைன் அரசு ஆண்டுக்கு, 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது. இதனால் அங்கு நுாற்றுக்கணக்கான ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

இதில் 'பயர் பாயின்ட்' என்ற நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இரண்டு முக்கிய போர் தளவாடங்களை உற்பத்தி செய்கிறது.

ஒன்று எப்.பி., - 1 என்ற வெடிக்கும் ட்ரோன்கள். ஆளில்லா விமானம் எனப்படும் இந்த ட்ரோன்கள் 1,600 கி.மீ., வரை பயணிக்கும் திறன் கொண்டவை. 2வது 'பிளமிங்கோ க்ரூஸ்' ஏவுகணை. இது 3,000 கி.மீ., துார இலக்கை தாக்கக் கூடியது.

2023ல் எப்.பி., - 1 ட்ரோன் உருவாக்கப்பட்ட பின், மாதம் 30 ட்ரோன்கள் தயாரிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை தாண்டி தற்போது மாதம் 100 ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ட்ரோனின் விலை 45 லட்சம் ரூபாய்.

பயர் பாயின்ட் நிறுவன ஆயுத வடிவமைப்பாளர் இரினா டெரெக் கூறியதாவது:


ரஷ்யாவை போல எங்களிடம் அதிக மனிதவளமோ அல்லது பணமோ இல்லை. எனவே வான் வழி தாக்குதல்கள் தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி.

எப்.பி., - 1 ட்ரோன்கள், 60 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும். ரஷ்யாவுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 60 சதவீதம் இந்த ட்ரோன் மூலம் நடந்தவை. அதில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீதான தாக்குதல்களும் அடங்கும்.

பயர் பாயின்ட் நிறுவனம் தற்போது தினம் ஒரு பிளமிங்கோ க்ரூஸ் ஏவுகணையை உற்பத்தி செய்கிறது. அக்டோபருக்குள் நாளொன்றுக்கு ஏழு ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறனை எட்ட முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us