ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ADDED : செப் 13, 2025 10:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று (செப் 13) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஜூலை மாதத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.