அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆதரிக்கும் அஜர்பைஜான், ஆர்மீனியா; தம்பட்டம் அடிக்கும் டிரம்புக்கு 5 நாடுகள் ஆதரவு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆதரிக்கும் அஜர்பைஜான், ஆர்மீனியா; தம்பட்டம் அடிக்கும் டிரம்புக்கு 5 நாடுகள் ஆதரவு
ADDED : ஆக 09, 2025 07:06 AM

வாஷிங்டன்: அமெரிக்கா உடன் மிகப்பெரிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, டொனால்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் அஜர்பைஜான், ஆர்மீனியா இணைந்தன.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில், ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் பங்கேற்றனர். அதிபர் டிரம்ப் முன்னிலையில், அவர்கள்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்கா உடன் மிகப்பெரிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் கூறியதாவது: டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்காக, ஒரு கூட்டு முறையீட்டை, பரிசு வழங்கும் குழுவிற்கு நாங்கள் வழங்குவோம், என்றார்.
ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியனும் இந்த முடிவை ஆதரித்தார். மேலும் அவர் கூறியதாவது: அதிபர் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் அதை ஊக்குவிப்போம், என்றார்.
அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளும் இணைந்ததன் மூலம், டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க ஆதரவு அளித்த நாடுகளின் பட்டியல் ஐந்தாக உயர்ந்துள்ளது. முன்னதாக, டிரம்ப் இந்த விருதைப் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கம்போடியாவும் அவருக்கு விருது வழங்க ஆதரவளித்தது.
'நான் தான் எல்லாமே என்று எண்ணம் கொண்ட டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடந்த போரை நிறுத்தி உள்ளேன். இதற்கு எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாட்டார்கள்' என டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.