sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

72 மணி நேரம், ஆறு நாடுகள்: சுற்றி சுற்றி தாக்கிய இஸ்ரேல்

/

72 மணி நேரம், ஆறு நாடுகள்: சுற்றி சுற்றி தாக்கிய இஸ்ரேல்

72 மணி நேரம், ஆறு நாடுகள்: சுற்றி சுற்றி தாக்கிய இஸ்ரேல்

72 மணி நேரம், ஆறு நாடுகள்: சுற்றி சுற்றி தாக்கிய இஸ்ரேல்

7


UPDATED : செப் 12, 2025 03:22 AM

ADDED : செப் 12, 2025 03:19 AM

Google News

7

UPDATED : செப் 12, 2025 03:22 AM ADDED : செப் 12, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை துவக்கியது.

மேலும், ஹமாஸ் அமைப்புக்கு உதவிய பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் லெபனான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.

இந்நிலையில், கடந்த 8 முதல் 10ம் தேதி வரையிலான 72 மணி நேரத்தில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் ஆறு நாடுகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

Image 1468173

காசா காசாவில் இஸ்ரேல் கடந்த 9ம் தேதி முதல் நடத்திய தாக்குதலில் இங்கு 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற, காசாவில் உள்ள உயரமான கட்டடங்கள், உள்கட்டமைப்புகள் மீது குண்டு வீசி வருகின்றனர்.

லெபனான் கடந்த 8ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள், லெபனானின் பெக்கா மற்றும் ஹெர்மல் மாவட்டங்களில் தாக்குதல் நடத்தின.

லெபனானுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை இலக்காக வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.

சிரியா சிரியாவில் 8ம் தேதி இரவு இஸ்ரேல் போர் விமானங்கள் பல இடங்களை தாக்கின. ஹோம்ஸில் உள்ள சிரிய விமானப்படை தளம் மற்றும் லடாக்கியாவுக்கு அருகிலுள்ள ராணுவ கட்டடம் அழிக்கப்பட்டன.

துனீஷியா காசாவிற்கு இஸ்ரேலின் தடையை மீறி உதவி பொருட்களை அனுப்புவதற்காக, ஐரோப்பிய நாடான இத்தாலி 'புளோடில்லா' என்ற கப்பலை அனுப்பியது. இது, நேற்று முன்தினம் துனீஷியா துறைமுகத்தை அடைந்தது. அப்போது அந்த கப்பலை, ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் இஸ்ரேல் தாக்கியது. இதனால், கப்பலின் மேற்பகுதியில் தீ பிடித்தது. அது உடனடியாக அணைக்கப்பட்டது.

கத்தார் இஸ்ரேல் விமானப்படை கடந்த 8ம் தேதி, கத்தாரின் தோஹாவில் ஹமாஸ் தலைமை அலுவலகத்தை தாக்கியது. இதில், ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன், அவரது அலுவலக இயக்குநர், மூன்று பாதுகாவலர் மற்றும் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி என ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தலைவர்கள் தப்பித்ததாக கூறப்படுகிறது.

ஏமன் ஹவுதி பயங்கரவாதிகள் வசமுள்ள ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனை, அரசு கட்டடங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது குண்டு வீசப்பட்டதில், 35 பேர் கொல்லப்பட்டனர்; 131 பேர் காயமடைந்தனர்.

ஹவுதி பயங்கரவாத தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.

அமெரிக்க அதிபர் கோபம்
கத்தார் மீது நடந்த தாக்குதல் குறித்து, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
இது புத்திசாலித்தனமான செயல் இல்லை. இவ்வாறு செய்தால், உங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. அமெரிக்கா உங்களுக்கு நிறைய உதவிகளை செய்கிறது; எங்களை முட்டாளாக்க வேண்டாம். இது பற்றி முன்னரே பேசியிருக்க வேண்டும். இப்படி திடீரென தாக்குதல் நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.



72 மணி நேர தாக்குதல்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவும் நோக்கில் செயல்படும் லெபனான், சிரியா, ஏமன், கத்தார், துனீஷியா நாடுகள் மற்றும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.








      Dinamalar
      Follow us