ADDED : ஏப் 05, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைக்கப்படுகிறது. 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்காக தமிழகத்திற்கான நிதியை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். தமிழகத்தின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத நிலையில் மத்திய அரசு உள்ளது.
திருவண்ணாமலையில் சத்துணவில் முட்டை கேட்ட மாணவர் மீது தாக்குதல் நடத்திய சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் முனியம்மா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இளம் சிறார் வன்கொடுமை சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. திராவிடல் மாடல் அரசு ஒரு காலமும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை சகிக்காது. இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கீதா ஜீவன், சமூக நலத்துறை அமைச்சர்

