ADDED : டிச 16, 2025 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்னை அரவணைத்து, சகோதரராக ஏற்றுக் கொண்ட த.வெ.க., தலைவர் விஜய்க்கு கோடான கோடி நன்றி. என்னை, 'இமயமே விழுந்தாலும் சறுக்காமல் இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் செங்கோட்டையன்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார்.
தமிழகத்தில், எதிர்காலத்தில் துாய்மையான தலைமை உருவாக வேண்டும். இரண்டு இயக்கங்களை துாக்கி எறிந்துவிட்டு, புதிய இயக்கத்தை கொண்டு வருவோம். விஜயை ஆட்சி பீடத்தில் அமர வைப்பதே என் லட்சியம். எந்த சக்தியாலும் விஜய் ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியாது; 234 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறித்து, விஜயிடம் ஒப்படைப்போம்.
- செங்கோட்டையன்
நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,

