ADDED : டிச 16, 2025 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமதாஸ் தரப்பிடம் பா.ம.க., அங்கீகாரம் இல்லை. தொண்டர்கள் முழுமையாக அன்பும ணி பக்கம் இருக்கின்றனர். ராமதாஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளில் தோல்வி அடைந்துள்ளனர். டில்லியில் போராட்டம் நடத்துகி றோம் என்ற பெயரில், வட மாநிலத்தவர்களை வைத்து நாடகம் நடத்தினர்.
தமிழகம் முழுதும் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர், திருவிழா போல பனையூர் வந்து, அன்புமணி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இதை அ வர்களால் தாங்க முடியவில்லை. ராமதாஸ் தரப்பினர் விரக்தியின் விளிம்பில், திக்கற்ற நிலையில் உள்ளனர் .
ரா மதாஸ் -- அன்புமணி இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சித்ததாக ஜி.கே.மணி கூறுகிறார். ஆனால், ராமதாசை பலமுறை சந்தித்தவர், அன்புமணியை ஒருமுறைகூட சந்திக்கவில்லை.
கட்சி விதிப்படி தலைவரின் அதிகாரத்தில், நிறுவனர் தலையிட முடியாது. தலைவரை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ளது.
- பாலு, செய்தி தொடர்பாளர், பா.ம.க.,

