யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
UPDATED : டிச 28, 2025 09:17 AM
ADDED : டிச 28, 2025 08:57 AM

சென்னை: ''3வது முறை என்னை கைது செய்து இருக்கின்றனர். அரசு ஒரு யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது என்பதை தவிர, இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்'' என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் இருந்து யுடியூபர் சவுக்கு சங்கர் நேற்று விடுவிக்கப் பட்டார். அவர் சிறையில் நடந்தது குறித்து அளித்த பேட்டி: புழல் சிறையில் 300,400 கைதிகளுடன் வைத்தார்கள். முதல்நாள் கஸ்டடிக்கு போய்விட்டு வந்த உடன் பார்த்தால், மரத்தில் போய் சிசிடிவி கேமரா மாட்டினார்கள். சிறையில் ஒருவர் வாழைப்பழம் கொடுத்தார்.
அவரை வேறு பிளாக்கிற்கு மாற்றிவிட்டார்கள். மற்றொருவர் மிக்சர் கொடுத்தார். இவரை 2வது பிளாக்கிற்கு மாற்றிவிட்டார்கள். என்னை 24 மணி நேரமும் கண்காணித்த காவலர்கள் யாராவது என்னுடன் பேசினால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
தனிமை சிறை
யாருமே பேசக் கூடாது என்றால் அது தனிமை சிறை தானே? சிறையில் டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பர் ஒருவர் தினமும் வாங்கி கொண்டு இருக்கிறார். அவரிடம் பேப்பர் வாங்கி படித்தேன். அந்த நபருக்கு பேப்பர் கொடுத்தால் ஜெயில் மாற்றம் செய்வதாக மிரட்டிவிட்டனர். என் மீது 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். 48 வழக்குகளுக்கும் நான் பெயில் போட்டுவிட்டு, 4 வருடம் கழித்து தான் நான் வெளியே வர முடியும். அதுவரைக்கும் உடல்நிலை என்னவாகும்.
உடல்நிலை மோசம் ஆக வேண்டும் என்பதற்காக தான், சிறைக்கு உள்ளேயும் அழுத்தம் தரப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தீங்க என்றால், பிரசர் கொடுப்பதற்கு தான். பிபி அதிகமாகுகிறது. இது மாதிரி அதிகமாகி செத்துவிட்டால் நிம்மதி எல்லாருக்கும். 2 நாட்கள் அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டு, இரங்கல் கூட்டம் நடத்திவிட்டு போய்விட்டு இருக்கலாம். சந்தோஷமாக இருப்பார்கள். இவன் தொல்லை ஒழிந்தது என்று நினைப்பார்கள்.
சவுக்கு மீடியா
அந்த ஐடியாவில் இவர்கள் செய்கிறார்கள் என்பதை எனது வழக்கறிஞர்கள் புரிந்து கொண்டு தான், உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் கேட்டனர். ரெகுலர் ஜாமின் வழங்க 4 வருடம் ஆகும். அதன் வரை உடம்பு தாங்க வேண்டும். உயர்நீதிமன்றம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மிக நீண்ட அப்ஷர்வேஷன் எல்லாம் கொடுத்து, மொத்தம் எத்தனை எப்ஐஆர் நிலுவையில் இருக்கிறது என நீதிபதிகள் கேட்டனர். பின்னர் ஜாமின் கொடுத்தனர். அவர்களின் நோக்கம் என்பது நான் சவுக்கு மீடியாவை நடத்த கூடாது என்பது தான்.
அஞ்சுகிறது
ஒரு யுடியூப் சேனலை பார்த்து அரசு பயப்படும் நிலைமையில் தான் இந்த மாநிலம் உள்ளது. நான் இதுவரை 2 வருடமாக எத்தனை வழக்குகளை சந்தித்து இருக்கிறேன். 3வது முறை என்னை கைது செய்து இருக்கின்றனர். அரசு ஒரு யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது என்பதை தவிர, இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும். இந்த அரசில் நடக்கும் தவறுகளை என்னை தவிர யார் பேசுகிறார். கொடுக்கும் காசை வாங்கி கொண்டு அமைதியாக இருந்தால் வாழலாம். இல்லையென்றால் வாழ விட மாட்டார்கள். இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.

