/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீதித்துறை ஊழியர் சங்க பணி நிறைவு பாராட்டு
/
நீதித்துறை ஊழியர் சங்க பணி நிறைவு பாராட்டு
ADDED : டிச 28, 2025 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நீதித்துறை ஊழி-யர்கள் சங்கம் சார்பில், நீதித்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தர்மபுரியில் நடந்தது.
மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வினோத்குமார், துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட நீதித்துறையில் நீண்ட காலம் பணி-யாற்றி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் அண்ணாமலை, தலைமை எழுத்தர் பொன்னுசாமி, பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் சிவராமன் உட்பட, 6 பேருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

