அந்தமான், கேரளாவுக்கு சிறப்பு சுற்றுலா அறிவிப்பு
அந்தமான், கேரளாவுக்கு சிறப்பு சுற்றுலா அறிவிப்பு
ADDED : டிச 27, 2025 07:13 AM

சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமான சுற்றுலாவுக்கும், கேரளாவுக்கு ரயில் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியரை கவரும் வகையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, ரயில்வே சார்பில் சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து அந்தமானில் உள்ள சுற்றுலா தலங்களை காணும் வகையில், விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வரும் பிப்ரவரி 17, மே 14ம் தேதிகளில், சென்னையில் இருந்து அந்தமான் சென்று, அங்குள்ள போர்ட்பிளேர், ஜாட்டம் சா மில், அந்த்ரோ மியூசியம், காஸ்ப்பியான்கோ கடற்கரை, செல்லுலார் ஜெயில், ராதா நகர் பீச், சுண்ணாம்பு பாறைகள், ராஸ் தீவுகள் உட்பட பல்வேறு இடங்களை பார்க்கலாம். ஏழு நாள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 38,000 ரூபாய் கட்டணம்.
இதேபோல், சென்னையில் இருந்து கேரளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எட்டு நாள் சுற்றுலாவில், வாகமன் மெடோஸ், பைன் பாரஸ்ட், கொச்சி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, குருவாயூர் புன்னத்துார் யானைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களை காணலாம். ஒருவருக்கு 16,900 ரூபாய் கட்டணம்.
மேலும் தகவல் பெற, 93848 54561, 93848 54569 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சுற்றுலா ஏற்பட்டாளர் 'சீனிவாசா டூர்' நிறுவனர் சேஷாத்ரி தெரிவித்துள்ளார்.

