ADDED : செப் 18, 2025 02:32 AM

சென்னை: 'சாராயம் விற்பது தான், தி.மு.க., இளைஞரணி கோட்பாடா' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் சாராயம் குடித்து, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் 22 பேர், கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தனர். இன்னும் எத்தனை உயிர்களை தி.மு.க., அரசு காவு வாங்கப் போகிறது. கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சியதாக, கோவிந்தராஜ் கைது செய்யப்பட்ட போது, அவர் தி.மு.க., நிர்வாகியே இல்லை என, தி.மு.க., கதை கட்டியது.
தற்போது, தி.மு.க., கவுன்சிலரும், இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ்குமார், சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காக கைதாகி உள்ளார். இதற்கு, தி.மு.க., என்ன கதை கூறப்போகிறது.
சாராயம் விற்பது தான், தி.மு.க.,வின் இளைஞரணி கோட்பாடா. இந்த செயல்களில் ஈடுபடத்தான், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி, பொற்கால ஆட்சியா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.