ADDED : செப் 18, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: த.வெ.க., உறுப்பினர் சேர்க்கைக்காக, 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
த.வெ.க.,வில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கென பிரத்யேகமாக, மொபைல்போன் செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதை பயன்ப டுத்தி, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்த, அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்காக, 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது மட்டுமின்றி, ஒரு தொகுதிக்கு ஆறு இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.