ADDED : செப் 11, 2025 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த தன்னுடைய பிரசார பயணத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் ஐந்து முறை வெளிநாடு சென்று வந்துள்ளார். அவர், தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. தொழில் முதலீடு செய்ய சென்றுள்ளார். முதல்வர் வெளிநாட்டு பயணத்தால், எத்தனை தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்துள்ளது. எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்ற என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை.
ஆனால், வெளிநாடு சென்ற போது, தொழில் ஒப்பந்தங்கள் போட்டு, முதலீடு செய்து, 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக பச்சைப்பொய் சொல்கிறார். தி.மு.க., ஆட்சியில் முழுக்க முழுக்க விளம்பரமே நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.