காலச்சூழலுக்கு ஏற்ப கள்ளுக்கு அனுமதி பழனிசாமி அறிவிப்பு
காலச்சூழலுக்கு ஏற்ப கள்ளுக்கு அனுமதி பழனிசாமி அறிவிப்பு
ADDED : செப் 11, 2025 02:57 AM

பழனிசாமி அறிவிப்பு
பொள்ளாச்சி: ''காலச் சூழலுக்கு ஏற்ப 'கள்' பிரச்னையில் முடிவு எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
அளவுக்கு மீறி கடன் வாங்கியதால் தான், அதிக வரி சுமையை மக்கள் மீது சுமத்தி உள்ளது தி.மு.க., அரசு. ஆனால், அரசுக்கு தேவையான நிதியை உருவாக்க எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஆயக்கட்டு பகுதிகளில் மனைகளான நிலங்களை கணக்கெடுத்து, அதற்கு மாற்றாக விளை நிலங்களை சேர்க்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கள்ளுக்கான தடை நீக்கம் குறித்து கள் ஒருங்கிணைப்பாளர் பல முறை பேசியுள்ளார். ஒரு பிரச்னை எழும்போது, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பும். காலச் சூழலுக்கு ஏற்ப 'கள்' பிரச்னையில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.