2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
ADDED : டிச 26, 2025 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக சட்டசபை, கவர்னர் உரையுடன் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் தமிழக முதல்வர், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கவர்னர் வாசிப்பார்.
தமிழகத்தில் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். பழைய மரபு படி தான் நடக்கும். கவர்னர் தமிழக சட்டசபையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இடைக்கால பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

