ADDED : டிச 25, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 530 பேர் சிறையில் உள்ளனர். அனைத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்புக்கு, 90,000 போலீசார் அடங்கிய பட்டியல் தயாரித்து பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்கள், 38 மாவட்ட எஸ்.பி.,க்களின் பெயர் இடம் பெற்றுள்ளன.

