தேர்தல் கமிஷன் ரத்து செய்த 42 தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியல் இதோ!
தேர்தல் கமிஷன் ரத்து செய்த 42 தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியல் இதோ!
ADDED : செப் 20, 2025 12:32 PM

புதுடில்லி: தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 தமிழக அரசியல் கட்சிகளின் பதிவை தலைமை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. அதன் முழு பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
இவற்றில் தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட விதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.
இவற்றில் தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு;
1. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்)
2. அகில இந்திய பார்வார்டு பிளாக்(சுபாஷிஸ்ட்)
3.அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி
4. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
5. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்
6.அகில இந்திய சத்தியஜோதி கட்சி
7.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்
8. அனைத்து மக்கள் நீதி கட்சி
9.அன்பு உதயம் கட்சி
10.அன்னை மக்கள் இயக்கம்
11. அனைத்திந்திய தொழிலாளர் கட்சி
12. அண்ணன் தமிழக எழுச்சி கழகம்
13. டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்
14.எழுச்சி தேசம் கட்சி
15.கோகுல மக்கள் கட்சி
16. இந்திய லவ்வர்ஸ் கட்சி
17. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
18.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
19.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி
20. மக்கள் தேசிய கட்சி
21. மக்கள் கூட்டமைப்பு கட்சி
22. மக்களாட்சி முன்னேற்ற கழகம்
23. மனிதநேய ஜனநாயக கட்சி
24.மனிதநேய மக்கள் கட்சி
25.பச்சை தமிழகம் கட்சி
26. பெருந்தலைவர் மக்கள் கட்சி
27.சமத்துவ மக்கள் கழகம்
28.சிறுபான்மை மக்கள் நல கட்சி
29.சூப்பர் நேஷன் கட்சி
30. சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்
31.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்
32. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
33. தமிழர் தேசிய முன்னணி
34. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி
35.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி
36.தமிழர் முன்னேற்ற கழகம்
37. தொழிலாளர் கட்சி
38. திரிணமுல் தமிழ்நாடு காங்கிரஸ்
39. உரிமை மீட்பு கழகம்
40.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி
41.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம்
42. விஜய பாரத மக்கள் கட்சி
இந்த 42 அரசியல் கட்சிகளில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி பாஜ கூட்டணியில் போட்டியிட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. திருச்செங்கோடு எம்எல்ஏவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார்.
ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனவே அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக கருதப்படவில்லை.
இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தல் கமிஷனின் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அதிமுக, பாஜ கூ.ட்டணியில் இணைந்து இவரது கட்சி தேர்தலை சந்தித்து வந்தது. 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜ சின்னத்திலும் போட்டியிட்டது.
2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை.