sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

/

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

64


UPDATED : செப் 09, 2025 07:54 PM

ADDED : செப் 09, 2025 07:24 PM

Google News

64

UPDATED : செப் 09, 2025 07:54 PM ADDED : செப் 09, 2025 07:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இன்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

தேர்தல்


நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று( செப்., 9) தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் தேஜ கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.

முதல் நபராக ஓட்டுப்போட்ட பிரதமர்


இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. முதல் நபராக பிரதமர் மோடி தனது ஓட்டை பதிவு செய்தார். பிறகு அனைத்து மத்திய அமைச்சர்கள், தேஜ கூட்டணி எம்பிக்கள், சோனியா, ராகுல், வாத்ரா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இண்டி கூட்டணி கட்சி எம்பிக்களும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். இந்த தேர்தலை பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

தேர்தல் முடிவடைந்த சிறிது நேரத்தில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், தேஜ கூட்டணி சார்பில் களமிறங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 452 ஓட்டுகள் பதிவாகின.


எதிர்க்கட்சியான சுதர்சன் ரெட்டிக்கு 300 ஓட்டுகள் கிடைத்தன.

பதிவான ஓட்டுகளில் 15 செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பயோ - டேட்டா


1957 அக்., 20: திருப்பூரில் பிறந்தார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ., முடித்துள்ளார்.

1996: தமிழக பா.ஜ., செயலரானார்.

1998, 1999: கோவையில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு.

2003 - 2006 : தமிழக பா.ஜ., தலைவராக இருந்தார். நதிநீர் இணைப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுதும், 93 நாளில் 19,000 கி.மீ., துாரம் ரத யாத்திரை நடத்தினார்.

2004: இந்தியா சார்பில், ஐ.நா., சபைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம் பெற்றிருந்த இவர், அங்கு உரையாற்றினார்.

2016: தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வகித்தார்.

2023 பிப்., 12: ஜார்க்கண்ட் கவர்னரானார்.

2024 மார்ச் 19: கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவி வகித்தார்.

ஜூலை 27: மஹாராஷ்டிரா கவர்னரானார்.

2025 ஆக., 17: தே.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு.

3வது தமிழர்

எஸ்.ராதாகிருஷ்ணன் (1952 - 1962), ஆர்.வெங்கட்ராமனுக்கு (1984 -- 1987) பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது தமிழர், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார்.








      Dinamalar
      Follow us