/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்னியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா
/
கன்னியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா
ADDED : செப் 09, 2025 08:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை கன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு, பாரதிதாசன் நகரில், கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம், காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது.
நேற்று, மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கன்னியம்மன் வீதியுலா வந்தார்.