தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்; முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்; முதல்வர் ஸ்டாலின்
UPDATED : செப் 11, 2025 01:47 PM
ADDED : செப் 11, 2025 01:06 PM

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்பத்தினரும் சேர்ந்து, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் எம்பிக்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக நிற்பேன். தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நீதிக்காகப் போராடுவேன். ஒருபோதும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நீதிக்காகப் போராடுவேன். தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.