/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான அரசு பஸ்களின் கூரைகள் ஒழுகுவதை; மழை துவங்கும் முன் நடவடிக்கை அவசியம்
/
சேதமான அரசு பஸ்களின் கூரைகள் ஒழுகுவதை; மழை துவங்கும் முன் நடவடிக்கை அவசியம்
சேதமான அரசு பஸ்களின் கூரைகள் ஒழுகுவதை; மழை துவங்கும் முன் நடவடிக்கை அவசியம்
சேதமான அரசு பஸ்களின் கூரைகள் ஒழுகுவதை; மழை துவங்கும் முன் நடவடிக்கை அவசியம்
ADDED : ஆக 28, 2025 04:41 AM

விருதுநகர்: -- மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்களில் கூரைகள் சேதமானவற்றில் மழையின் போது மழை நீர் ஒழுகி பயணிகள் நனைந்தபடி செல்வது தொடர்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் பஸ்களில் சேதமானவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்கு வரத்து பணிமனைகளில் தற்போது 457 பஸ்கள் இயக்கப்படுகிறது. நகர், புறநகர், ஊரகப்பகுதி களுக்கு இடையே பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி பயணிக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் கிராமங்களுக்கு பழைய அரசு பஸ்கள் இயக்கப் படுகிறது.
இந்த பஸ்களிலும் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள், வேலைக்கு சென்று திரும்புபவர்கள் அதிக கூட்டத்துடன் படிக்கட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஊரகப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் பெரும்பாலானவற்றில் கூரைகள் சேதமான நிலையில் உள்ளது.
இதனால் வெயில் காலத்தில் பிரச்னை இல்லாமல் இருக்கிறது. ஆனால் மழைக்காலம் துவங்கி விட்டால் பயணிகள் நனைந்தபடி சென்று வரும் நிலை தொடர்கிறது. அதிலும் கூரைகளில் ஒரிரு இடங்களில் மட்டும் இல்லாமல் ஆங்காங்கே சேதமாகி இருப்பதால் ஒவ்வொரு முறையும் மழையின் போதும் பயணிகள் பஸ்சிற்குள் ஒழுகாத இடத்தை தேடி அலையும் நிலை உள்ளது.
இப்படி பழைய அரசு பஸ்களின் கூரை சேதத்தால் பயணிகள் மழையின் போது பஸ்சிற்குள் குடை பிடித்தபடி பயணிக்கும் நிலை உண்டாகியுள்ளது. தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மாலை நேரத்தில் பெய்த மழையால் கூரை சேதமான பஸ்களில் பயணித்த
பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளை அழைத்து சென்ற பெற்றோர், சிகிச்சை, பரி சோதனைக்கு சென்று வந்த நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை இன்னும் சில மாதங்களில் துவங்க இருப்பதால் அதற்கு முன்பே கூரை சேதமான அரசு பஸ்களை சீரமைத்து ஊரகப்பகுதி களுக்கு சென்று வரும் பயணிகள் நனைந்தபடி செல்வதை தடுக்க வேண்டும்.
இதற்காக 9 அரசு போக்கு வரத்து பணிமனைகளிலும் கூரைசேதமாகி மழைநீர் ஒழுகும் படியாக உள்ள பஸ்களை கண்டறிந்து அவற்றை பருவமழை துவங்கும் முன்பு படிப்படி யாக சீரமைக்கும் பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.