sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

--ஆக்கிரமிப்பு, குப்பை மேடாக மாறிய அவலம்

/

--ஆக்கிரமிப்பு, குப்பை மேடாக மாறிய அவலம்

--ஆக்கிரமிப்பு, குப்பை மேடாக மாறிய அவலம்

--ஆக்கிரமிப்பு, குப்பை மேடாக மாறிய அவலம்


ADDED : ஆக 28, 2025 04:39 AM

Google News

ADDED : ஆக 28, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் செப்டிக் டேங்க் கழிவுகள், மண் திருட்டு, ஊராட்சி களின் குப்பை, கழிவுநீர் என அயன் கொல்லங் கொண்டான் கண்மாய் விவசாயிகள் விரக்திக்கு உள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையம் கொல்லங்கொண்டான் கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் ஆற்று நீர் நேரடியாகவும் உபரி கண்மாய்கள் நிறைந்தும் நீர் ஆதாரமாக இருந்து 250 ஏக்கருடைய மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கண்மாயாக உள்ளது.

கிருஷ்ணாபுரம், சுந்தர நாச்சியார்புரம், சோலைசேரி ஊராட்சிகளின் குப்பை கொட்டும் இடமா கவும் இருந்து வருகிறது. குடியிருப்பு கழிவு நீர், கொல்லம் கொண்டான் விலக்கில் இருந்து அரிசி ஆலைகளின் கழிவு நீர் கண்மாயின் நீரை மாசடைந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் செப்டிக் டேங்க் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

இதனால் நன்னீரில் விவசாயம் செய்து வந்த இப்பகுதி விவசாயிகள் உவர் நீராக கிணறு, ஆழ்துளை குழாய்கள் மாறி வருவது கண்டு வேதனையில் உள்ளனர்.

இதில் கண்மாய்க்கு உள்ளேயே ஒரு பகுதி பன்றி, மாடுகள் நாய்களின் வளர்ப்பு குடிசைகளும், மயானமாகவும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வருகிறது.

விவசாய மண்பாண்ட தேவைக்கு மண் அள்ளும் அனுமதி பெற்றும், அனுமதி இன்றியும் கேட்பாரற்ற வகையில் ஆளுங்கட்சியினரால் மண் அள்ளப்பட்டு ஆங்காங்கே பல அடி ஆழத்திற்கு பள்ளமாக மாறி உள்ளது.

விவசாய பாசன தேவையின் போது மடைகளுக்கு தண்ணீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தண் ணீரிருந்தும் மடைகள் வழியே பாசனத்திற்கு உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீரமைக்காத மடைகள் நல்லமாடன், விவசாயி: முன்பு அனைவருக்கும் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்த கண்மாய் கழிவுகள் கலப்பால் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அதற்கும் உபயோகமற்ற நிலைக்கு விரைவில் மாறும். கண்மாய் மராமத்து பணிகளில் விவசாயத்திற்கு அடிப்படையான மடைகளை முறையாக சீரமைக்க வில்லை.

ஆலமரம் அருகே விரியன் கோயில் ஒட்டி உள்ள மடையை சரி செய்யாமல் விட்டதால் நீர் நிறையும்போது வெளி யேறாமல் தடுக்க கட்டையை வைத்து அடைத்துள்ளோம். கணக்கு காட்ட வேண்டி நடக்கும் முறையற்ற பணிகளை முறையாக கண் காணிக்க வேண்டும்.

கழிவுகளின் சங்கமம் செல்லச்சாமி, விவசாயி: கண்மாய் சுற்றியுள்ள சுந்தர நாச்சியார்புரம், கிருஷ்ணா புரம், சோலைசேரி ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கிடங்காக கண்மாயை மாற்றி உள்ளதுடன் உள்பகுதி வரை கழிவு நீர் சென்று சேர வாய்க்கால் வெட்டிய அவலத்தை கேட்பார் இல்லை.

இக்கண்மாயை பிளாஸ்டிக் கழிவுகள், ஊராட்சி கழிவுகள், ஆலைகளின் கழிவுகள் சேர்வதை கண் காணித்து தடுக்க வேண்டும். சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு நீர் ஆதாரத்தை சிதைத்து கழிவுகள் கொட்டப் படுவதை மாவட்ட நிர்வாகம் உடனே தடுக்க வேண்டும்.

பரிதாபமான நிலை ராமையா, பாசன விவ சாயிகள் சங்கத் தலைவர்: மாவட்டத்தில் 2வது பெரிய கண்மாயாக அமைந்து இக்கண்மாய் நிறைந்த பின் மூன்று பகுதிகளாக பிரித்து பாசனத்திற்கு திறந்து விடப்படும். மராமத்து என்ற பெயரில் கணக்கு காட்டப் படுவதால் கண்மாய் பரிதாபமான நிலைக்கு செல்கிறது. நீர் நிலையை அப கரிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கரைகளை மட்டும் உயர்த்தி பலன் இல்லை.

பல நுாறு ஆண்டுகள் சிக்கல் இன்றி வந்த கண்மாய் விவசாயம் கடந்த சில பத்தாண்டுகளில் கழிவுகள் சேர்ந்து கொண்டே வந்து கடைசியில் கண்மாய் பாசனம் என்பது பரிதாப நிலையை எட்டி வருகிறது. அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us