/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் சேதம், தெரு விளக்குகள் பற்றாக்குறை
/
ரோடு, வாறுகால் சேதம், தெரு விளக்குகள் பற்றாக்குறை
ADDED : ஆக 28, 2025 11:48 PM

சிவகாசி: தெருக்களில் ரோடு, வாறுகால் சேதம், தெரு விளக்குகள் பற்றாக்குறை என சிவகாசி மாநகராட்சி 16 வது வார்டு ஏ.ஜே., நகர் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சி 16 வது வார்டு ஏ.ஜே., நகரில் தெருக்களில் ரோடு, வாறுகால் சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. இப்பகுதி உருவாகி 40 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரையிலும் தெருக்களில் ரோடு அமைக்கவில்லை. இதனால் மக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
தெரு நாய்கள் தொல்லையால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மெயின் ரோட்டில் நடமாடும் நாய்கள் பள்ளி மாணவர்கள், டூவீலர்களில் செல்பவர்களை விரட்டி கடிக்கிறது. மெயின் ரோட்டில் உள்ள வாறுகால் துார்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது.
கே.மாலையம்மாள், இப்பகுதியில் தெருவில் இதுவரையிலும் ரோடு அமைக்கவில்லை. இப்பகுதியில் வீடுகள் மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற் படுகிறது. எனவே இங்கு உடனடியாக ரோடு, வாறுகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஜி.மாலையம்மாள், இங்கு பெரும்பான்மையான பகுதியில் தெரு விளக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அச்சத்தில் இருக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
தங்கம், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திறந்த வெளி கிணறு கழிவுநீர் கிடங்காக மாறி வருகின்றது. மேலும் குப்பைகளும் கிணற்றில் கொட்டப்படுவதால் துர் நாற்றம் ஏற்படுகிறது. ரோட்டோரத்தில் திறந்த வெளி கிணறு உள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. சற்று கவனம் சிதறினாலும் கிணற்றுக்குள் விழ வேண்டும். எனவே உடனடியாக கிணற்றினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.