/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய்மை மிஷன் திட்டத்தில் கழிவு பொருட்கள் அகற்றம்
/
துாய்மை மிஷன் திட்டத்தில் கழிவு பொருட்கள் அகற்றம்
ADDED : செப் 20, 2025 07:27 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் துாய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு செய்யப்பட்ட பொருட்களை தரம் பிரித்து அகற்றும் பணி நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, கழிவு செய்யப்பட்ட பொருட்களை தரம் பிரித்து அகற்றும் பணியினை துவக்கி வைத்தார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
இதில் அனைவரும், துாய்மை உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியதாவது:
மாவட்ட அரசு அலுவலகங்களில் உள்ள காகித குப்பைகள், பயன்பாடற்ற கண்ணாடி பொருட்கள், மின்னணு கழிவுகள், உடைந்த மர பொருட்கள், உபயோகமற்ற தளவாடப்பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து கழிவு பொருட்களுக்குரிய தொகையினை அரசுக்கணக்கில் செலுத்த தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், விழுப்புரம் வேளாண் துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், அரசு அலுவலக வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவு பொருட்கள் தரம் பிரித்து மக்கும், மக்காத மற்றும் பயன்பாடில்லாத பொருட்கள் பிரித்து வைக்கப்பட்டது.
அனைத்து அலுவலங்களிலும் கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு துாய்மையாக பராமரிக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சேகரிக்கப்பட்ட பொருட்களை எடையிட்டு இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான தொகை அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், நகராட்சி கமிஷனர் வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.