/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளக்குறிச்சி நபரிடம் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு தகவல்

ADDED : செப் 13, 2025 07:00 AM

விழுப்புரம் :கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நபரிடம் தங்க நகை சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சேர்ந்து ஏமாற் றமடைந்த நபர்கள் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,
விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டம், அழகாபுரத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன், 69; என்பவர் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்திருந்தார்.
அதில், கள்ளக்குறி ச்சி மாவட்டம், மைக்கேல்புரத்தைச் சேர்ந்த ஜான்கென்னடி, 49; என்பவர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 2024 அக்டோபர் 1ம் தேதி வரை கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் பீனிக்ஸ் சூப்பர் மார்கெட் என்ற பெயரில் கடை வைத்திருந்தார்.
அதில், தங்க சேமிப்பு திட்டம், கார் வாங்கும் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், மளிகை பொருட்கள் இரட்டிப்பு திட்டம், ஸ்டாக் பாயின்ட் திட்டம் மற்றும் அதிக முதலீடு போட்டால் சிங்கப்பூர் செல்லும் திட்டம் ஆகிய பல திட்டங்களை அறிவித்து பல சேமிப்பு திட்டங்கள் மற்றும் இரட்டிப்பு பணமும் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.
அதில், விழுப்புரம், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, கொடைக்கானல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல நபர்களிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என தெரிவித்திருந்தார்.
இது குறித்து விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜான்கென்னடியை கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து வரும் 26ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இவ்வழக்கில் பாதிக்கபட்ட பொதுமக்கள் அனைவரும் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவை நாடி தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இவ்வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள புகார் மனு கொடுக்கலாம்.
விழுப்புரம் மேற்கு சண்முகாபுரம் சேர்மன் சண்முகம் தெரு, எண் 7ல் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வரலாம். மேலும், விபரங்களுக்கு 0414-250366 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.