/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 13, 2025 07:03 AM

செஞ்சி: செஞ்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
செஞ்சி பேரூராட்சி சார்பில் இரண்டாம் கட்டமாக நடந்த முகாமிற்கு, பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கலையரசி வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உத்தரவை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுகந்தி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, பேரூராட்சி துணை சேர்மன் ராஜலட்சுமி செயல்மணி.
நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முகாமில், மகளிர் உரிமை தொகை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.