நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி., மேலக்கொந்தை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமலர், 28; இவர் திருமணம் ஆகி கணவருடன் கோபித்துக் கொண்டு கடந்த,10 ஆண்டுகளாக தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 16ம் தேதியன்று, வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் தாய் மகாலட்சுமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.