/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : செப் 20, 2025 07:12 AM

விழுப்புரம் : மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.
விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி துவக்க உரையாற்றினார். மாவட்ட அவை தலைவர் கண்ணன், துணை செயலர்கள் ஆனந்தி அண்ணாதுரை, நாகம்மாள், பொருளாளர் வெங்கடேசன், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலர்கள் அற்புதவேல், ஏழுமலை, நகர செயலர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தலைமை பேச்சாளர்கள் ராமச்சந்திரன், மணிவாசகம் சிறப்புரையாற்றினர்.
அதில், தமிழகத்தில் மீண்டும் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்; சாதாரண மக்களுக்கும் அரசியல் அதிகாரம், உரிமை கிடைக்க வேண்டும் என்ற அண்ணாதுரையின் கொள்கையை அ.தி.மு.க., தான் பின்பற்றி வருகிறது; ஆளும் தி.மு.க., மக்கள் விரோத குடும்ப ஆட்சி நடத்துவதால், வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்கும்; என பேசினர்.
ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், முத்தமிழ்செல்வன், ராஜா, தீனதயாளன், கணேசன், பன்னீர், முகுந்தன், கோவிந்தசாமி, பேரூராட்சி செயலர்கள் முருகவேல், பூர்ணாராவ், கனகராஜ், சங்கர், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழ்செல்வி, வழக்கறிஞர்கள் ஸ்ரீதர், சகாதேவன், செந்தில், ராஜேந்திரன், சக்திவேல், முத்தையன், ஜெகதீஸ்வரி, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.