/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தகவல்
/
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தகவல்
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தகவல்
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தகவல்
ADDED : செப் 20, 2025 07:15 AM
மயிலம் : மயிலம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறைத் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் தலைமை தாங்கி, பேசியதாவது:
தமிழகத்தில் மாவட்டந்தோறும், 100 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து, இதுவரை 90 இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வு வகுப்பு, செய்முறை வகுப்பு எதுவென்றால் இதுபோன்ற மேடையில் பேசுவது, கவிதை புனைவது, கட்டுரைகளை எழுதுவது, பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வது தான்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஈ.வே.ரா., அண்ணாதுரை, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நினைவு செய்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள், மாநிலத்தில் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களைத் தேர்வு செய்து, அதிலிருந்து 200 மாணவர்களை அழைத்து இளந்தமிழன் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்தி, பல்வேறு ஆளுமைகளை பேச வைத்து, பயிற்சிப்பட்டறை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இது போன்ற பயிற்சிப்பாசறை வேறு எந்த மொழியினரும் நடத்த முடியாது. கடந்த, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளை மாணவரால் ஒப்பிக்க முடிகிறது என்றால், அதுதான் நமதுமொழியின் சீரிளமைத் திறம்.
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இளங்கலைத்தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறையில் உதவிப் பிரிவு அலுவலர் வேலைவாய்ப்பு உள்ளது.
இந்த துறையில் இயக்குநர் நிலை வரை பதவி உயர்வு பெற முடியும். தமிழ் வளர்ச்சித்துறையிலும் பணி வாய்ப்பு உள்ளன.
இளங்கலைத்தமிழ் இலக்கியம் பயின்று, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநராக வர முடியும் .
தமிழ் இலக்கியத்தை படிக்கும் போதே ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டால் மொழிபெயர்ப்பு வல்லமை வருகிறது. இதன்மூலம் இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்பணித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.