/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்
/
கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்
கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்
கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கல்
ADDED : டிச 25, 2025 06:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர்களை இழந்த பிளஸ் 2 வகுப்பு முடித்து கல்லுாரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மாணவி, மாணவியர்களுக்கு லேப் டாப் வழங்கினார். பின், அவர் கூறுகையில், அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் பெற்றோர்களை இழந்து வாழும் மாணவ, மாணவிகள் எந்த விதத்திலும் கல்வி பாதிக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் மாதம் உதவித்தொகை 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்து பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் படிக்கும் 12 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப் டாப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.
அப்போது, சி.இ.ஓ., அறிவழகன், நேர்முக உதவியாளர் பெருமாள் கலந்துகொண்டனர்.

