/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூரப்பட்டு மேம்பாலம் அருகே இரும்பு தடுப்பு அமைக்கப்படுமா
/
சூரப்பட்டு மேம்பாலம் அருகே இரும்பு தடுப்பு அமைக்கப்படுமா
சூரப்பட்டு மேம்பாலம் அருகே இரும்பு தடுப்பு அமைக்கப்படுமா
சூரப்பட்டு மேம்பாலம் அருகே இரும்பு தடுப்பு அமைக்கப்படுமா
ADDED : டிச 25, 2025 06:32 AM
விழுப்புரம்: விழுப்புரம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் சூரப்பட்டு மேம்பாலம் அருகில் கடந்த ஆண்டு பெஞ்சல் புயலால் சாலை சேதமடைந்தது. இதனால், சாலையோரத்தில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில் விபத்தை தடுக்க தற்காலிகமாக எச்சரிக்கை போஸ்டர்கள் நடப்பட்டுள்ளது.
ஆனால், நிரந்தர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. அப்பகுதியில் வாகனங்கள், சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கும் அவல நிலை உள்ளது. இதனால், அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடக்கும்போது அச்சத்துடன் செல்கின்றனர்.
விபத்தை தடுக்க சாலையோரத்தில் இரும்பு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.