/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி பலி
/
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி பலி
ADDED : ஜன 01, 2026 03:55 AM
மயிலம்-: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வந்தவாசி தாலுகா கீழ்நரமா கிராமத்தில் வசிக்கும் முருகன்மகள் ஸ்ரீ ஹர்ஷா, 5; 1ம் வகுப்பு படிக்கும் இவர் விடுமுறையில் தனது அத்தை வீடான மயிலத்திற்கு தாயுடன் வந்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீ ஹர்ஷா வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டின் தரையில் 10 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
உடன் குடும்பத்தினர் சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

