/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருதரப்பு தாக்குதல்: ஐந்து பேர் மீது வழக்கு
/
இருதரப்பு தாக்குதல்: ஐந்து பேர் மீது வழக்கு
ADDED : ஜன 01, 2026 03:54 AM
விழுப்புரம்: தகராறில் தாக்கிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த ஐந்துபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் தமிழரசன் மனைவி தேவி, 38; இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பாவாடை, 66; என்பவருக்கும் இடப்பிரச்னையில் முன்விரோதம் இருந்து வருகிறது. அந்த இடத்தில் இருந்த மரத்தை தேவி வெட்டியதால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், பாவாடை மற்றும் விஜயலட்சுமி, 42; ஆகியோர் சேர்ந்து தேவியை திட்டி தாக்கினர். இதையடுத்து, தமிழரசன், 42; தேவி மற்றும் மண்ணாங்கட்டி மனைவி தெய்வநாயகி, 85; ஆகியோர் சேர்ந்து பாவாடையை தாக்கினர்.
இருதரப்பு புகாரின்பேரில், வளவனுார் போலீசார் பாவாடை, தேவி உள்ளிட்ட ஐந்துபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

