
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில், கோலியனுார் மற்றும் பனமலை உமையாள்புரம் காந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோலியனுார் குடியிருப்போர் நலசங்கம் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பெரியசாமி, செயலாளர் பாலாஜி, பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாவட்ட அமைப்புக்குழு பாலசுப்ரமணியன் பேசினர்.
கோவில் உரிமைகோரும் நிலம், நத்தம் போன்ற இடங்களில் உண்மை நிலையை உயர்மட்ட குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.