/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இல்லோடு அரசு பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு சான்று
/
இல்லோடு அரசு பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு சான்று
ADDED : செப் 09, 2025 11:45 PM

விழுப்புரம்; மாவட்டத்தில், 100 ஆண்டுகளை கடந்த அரசு பள்ளிகளுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 87 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முன்னாள் மாணவர்கள் சார்பில், நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. செஞ்சி அடுத்த இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் மாணவர்கள் இணைந்து நூற்றாண்டு விழாவை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில், அதிகளவிலான முன்னாள் மாணவர்கள் பங்கேற்றதை பாராட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இல்லோடு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் அருள் மற்றும் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் பழனி உள்ளிட்ட முன்னாள் மாணவர்களிடம், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார். அப்போது, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் பெருமாள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.