/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருத்துவமனையில் 3 சவரன் 'அபேஸ்'
/
மருத்துவமனையில் 3 சவரன் 'அபேஸ்'
ADDED : செப் 09, 2025 11:46 PM
விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 3 சவரன் 'அபேஸ்' செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அருகே, காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 48; விவசாயி. இவரது மாமியார் இந்திராணி, 72; உடல் நலக்குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2ம் தேதி அவருக்கு ஸ்கேன் எடுக்க கூறியதால் மாரிமுத்து இந்திராணியின் தாலி, செயின், கம்மல் அடங்கிய, 3 சவரன் நகைகளை அவிழ்த்து, பையில் வைத்து அதை ஸ்கேன் அறை எதிரில் அமர்ந்திருந்த நபர் ஒருவரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது அந்த நபரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.