/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொது மேலாளர் தகவல்
/
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொது மேலாளர் தகவல்
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொது மேலாளர் தகவல்
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொது மேலாளர் தகவல்
ADDED : செப் 20, 2025 02:52 AM
விழுப்புரம்:அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணிகள் டிச., மாதத்திற்குள் முடிவடையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது;
விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட மேம்பாட்டு பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள், இருசக்கர வாகனங்களில் தண்டவாளங்களை கடந்து செல்லாமல் இருக்க குறைந்த பளு கொண்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு 4 எக்ஸலேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளின் தேவைக்காக கூடுதல் ரயில் இயக்குவது தொடர்பாக சாத்தியக்கூறுகள் இருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.