/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் சாவு
/
மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் சாவு
ADDED : செப் 19, 2025 08:16 PM

விழுப்புரம்:மின்சாரம் பாய்ந்த விபத்தில் சகோதரர்கள் இறந்தனர்.
விழுப்புரம் மாவட்ட ம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொங்கராயநல்லுாரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 42. இவர், செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில் தங்கி, சூரியபிரகாஷ் என்பவர் நிலத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை, 10:00 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள வல்லம் சேர்மன் அமுதா ரவிக்குமார் நிலத்திற்கு ராமச்சந்திரன் சென்றார். அப்போது, அங்கு அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை மிதித்ததில் ராமச்சந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதைக்கண்ட அவரது தம்பி சின்னராசு, 30, ராமச்சந்திரனை காப்பாற்ற, அவரது கையை பிடித்து இழுத்தார். இதில், சின்னராசு மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செஞ்சி போலீசார் இருவரின் உடலையும் மீட்டு விசாரிக்கின்றனர்.