/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதத்தின் பெயரைச் சொல்லி மோடி அரசு ஏமாற்றுகிறது மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு
/
மதத்தின் பெயரைச் சொல்லி மோடி அரசு ஏமாற்றுகிறது மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு
மதத்தின் பெயரைச் சொல்லி மோடி அரசு ஏமாற்றுகிறது மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு
மதத்தின் பெயரைச் சொல்லி மோடி அரசு ஏமாற்றுகிறது மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு
ADDED : ஏப் 09, 2024 05:15 AM
திண்டிவனம்: 'பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும்' என மாஜி அ.தி.மு.க., அமைச்சர் சண்முகம் பேசினார்.
திண்டிவனம் அருகே மயிலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அகூர் கிராமத்தில், ஆரணி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அவர் பேசியதாவது:
இங்கு ஆளும் தி.மு.க., அரசும், மத்தியில் ஆளும் மோடி அரசும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. விளம்பரத்தில் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் பொருளாதாரம் உயர்ந்து விட்டதா, கல்விக் கடன் ரத்தாகி விட்டதா, தாலிக்கு தங்கம் வருகிறதா? பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்களா.
ஜெ., ஆட்சியில் எல்லாம் கொடுத்தார்கள். 52 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள். இந்த 3 ஆண்டு ஆட்சியில் ஒரு லேப்டாப் கூட மாணவர்களுக்கு கொடுக்கவில்லை.
மத்தியில் 10 ஆண்டு காலம் மோடி ஆட்சியில் வளர்ச்சி இல்லை. வேலை வாய்ப்பும் இல்லை. தேர்தல் வந்தால்தான் காஸ் விலையை 100 ரூபாய்க்கு குறைக்கத் தெரியுது. தேர்தல் முடிந்த உடன் காஸ் விலை 5,000 ரூபாயாக உயர்ந்துவிடும். மோடி அரசு பித்தலாட்ட அரசு.
மக்களை மதத்தின் பெயரைச் சொல்லி மோடி அரசு ஏமாற்றுகிறது. ஒரு நாடு, ஒரே அரசு, ஒரே தேர்தல். ஒரே பிரதமர், ஒரே கடவுள். கடவுள் கூட அவர்கள் சொல்லும் கடவுளைத்தான் நாம் கும்பிடனும்.
பா.ஜ., மதத்தின் பெயரால் நாட்டை பிளவு படுத்த பார்க்கிறது. இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும்.
இவ்வாறு மாஜி அமைச்சர் சண்முகம் பேசினார்.

