/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சினிமா பார்க்க முடியாததால் பெண் தற்கொலை
/
சினிமா பார்க்க முடியாததால் பெண் தற்கொலை
ADDED : செப் 10, 2025 12:22 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் - முத்துார் ரோடு, பழையாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவா, டிரைவர். இவரது மனைவி சவுமியா, 23. கடந்த, ஏழு மாதம் முன் திருமணம் செய்தனர்.
கணவரிடம், சினிமா பார்க்க தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கடந்த ஒரு வாரமாக கூறி வந்தார். ஆனால், கணவர் அழைத்து செல்லவில்லை. நேற்ற முன்தினம் மாலை, ஜீவா தனது வீட்டு அருகே உள்ள மதுரை வீரன் கோவிலுக்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பினார். உட்புறமாக தாழ் போட்டு இருந்தது.
கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காத காரணமாக, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்ற பார்த்தனர். அப்போது, சவுமியா துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் அவர் ஏற்னகவே இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.