ADDED : செப் 10, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை, திருப்பூர் பா.ஜ., வினர் அவரது வீட்டு முன், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இதனை பா.ஜ., வினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், சி.பி.ராதாகிருஷ்ணனின், சொந்த ஊரான திருப்பூரில், அவரின் வீடு அமைந்துள்ள செரீப் காலனியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் மலர்கொடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.
தொடர்ந்து, பட்டாசு வெடித்து, அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.