/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
n மாவட்டத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வர் உத்தரவிடுவாரா?: பொதுமக்கள், தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

ADDED : டிச 29, 2025 05:22 AM
திருப்பூர்: குப்பை, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு திருப்பூர் சார்ந்த பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, முதல்வரின் நேரடி கவனமும், உத்தரவிடலும் அவசியமாகிறது; பல்லடத்துக்கு இன்று வருகை தரும் முதல்வர் மனம் வைத்தால், இது சாத்தியமாகும்.
திருப்பூரில், தினமும் 800 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன. இதை முறையாக கையாள்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. இப்பிரச்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் அடிக்கல் இடம் தேர்வு இல்லை திருப்பூரில், 58 கோடி ரூபாய் மதிப்பில் 200 டன் கழிவுகளை கையாளும் விதமாக பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆக., மாதம் உடுமலையில் நடந்த அரசு விழாவில் இந்த மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை முதல்வர் நாட்டினார். இதற்கு இதுவரை இடம் கூட தேர்வு செய்யப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் சேகரமாகும் கழிவுகளை தரம் பிரித்து மின் உற்பத்தி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் திருப்பூரில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இன்று தி.மு.க. மகளிர் அணி மாநாட்டுக்கு பல்லடம் வரும் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து தீர்வு ஏற்படும் வகையில் அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.