/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சன்மார்க்க சங்க முப்பெரும் விழா
/
சன்மார்க்க சங்க முப்பெரும் விழா
ADDED : டிச 29, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், கருவம்பாளையம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், முப்பெரும் விழா நடந்தது.
தலைவர் நீறணிபவளக்குன்றன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பிரித்வி இன்னர்வேர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலன், திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கருணை இல்ல நிர்வாகத் தலைவர் சுப்பிரமணியம், நாராயணசாமி ஆகியோர் பேசினர். இணைசெயலாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

